அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தி.மு.க வில் இணைந்த சம்பவம் பரபரப்பு அடங்குவதற்குள் தற்போது இன்னொரு சம்பவம் அரேங்கேறியுள்ளது தி.மு.க வின் தேர்தல் வியூக நிபுணராக பிகாரி, இந்திக்காரர், பார்ப்பனர், பிரசாந்த் கிஷோர் 380 கோடி ஆலோசனைக்கு வைத்துள்ளார்கள் திமுகவினர். இவரின் ஆலோசனையின் படி முதலில் ஒன்றிணைவோம் வா திட்டம் படுதோல்வியை சந்தித்தது. அடுத்த திட்டத்தின்படி தி.மு.க.,வில், ‘எல்லாரும் நம்முடன்’ என்ற, இணையதளம் வாயிலாக, உறுப்பினர் சேர்க்கை. இந்த திட்டத்தின் படி தினந்தோறும் பல ஆயிரம் உறுப்பினர்கள் சேர்ந்து வருவதாக, கட்சி தரப்பில்அடித்துவிடுகிறார்கள். ஆனால், உறுப்பினர் சேர்க்கையில், பெயர், முகவரி போன்றவற்றுக்கு, ஆதாரம் எதுவும் தேவையில்லை போட்டோவும் கட்டாயமில்லை.
இதனால், கட்சித் தலைமையை ஏமாற்றுவதற்காக, உடன்பிறப்புகள் போலி பெயர்களில், உறுப்பினர் பதிவு செய்யப்படுகிறது என்ற புகார் எழுந்துள்ளது. ஒரே நபர், முகவரியை மாற்றி கொடுத்து, பலமுறை உறுப்பினராகும் கூத்தும் அரங்கேறுகிறது.தி.மு.க., நிர்வாகி ஒருவர் கூறுகையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் பெயரில், தி.மு.க.உறுப்பினர் சேர்க்கை நடந்திருப்பது அம்பலமாகி, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது’ என்றார். இன்னொரு உடன்பிறப்பு ஒசாமாவும் திமுக உறுப்பினர் ஆனார் என அதிர்ச்சி செய்தியை வெளியிட்டார். இப்படிப்பட்ட அதிர்ச்சி முடிவதற்குள் தற்போது தமிழக முதல்வர் எட்டப்படி பழனிசாமி பெயரில் திமுக உறுப்பினர் அட்டை வெளியிடப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில், மொபைல் எண் ஓடிபி மூலம் யாரை வேண்டுமானாலும் உறுப்பினராக்கலாம் என்ற குளறுபடி உள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப், விவரமறியா வாரிசு’ என்ற பெயரிலும் திமுக அடையாள அட்டை பெறப்பட்டது. இந்நிலையில், தமிழக முதல்வர் பழனிசாமிக்கும், திமுக உறுப்பினர் அட்டை பெறப்பட்டுள்ளது. முறைப்படுத்தாத இந்த ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கையால், பிரபலங்களுக்கு சிக்கல் தான் உருவாகும். இன்னும் எந்தெந்த பெயரில் எல்லாம் திமுக உறுப்பினர் அட்டை வரப்போகிறதோ என நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.