எது கிடைத்தாலும் சுருட்ட நினைக்கும் திமுகவை வறுத்தெடுத்த விந்தியா.

திமுகவில் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு இல்லை என்றும், எது கிடைத்தாலும் சுருட்ட நினைக்கிற திமுக உள்ளதாக நடிகை விந்தியா விமர்சித்துள்ளார். கோவை, பொள்ளாச்சியில் நடைபெற்ற கூட்டத்தில் இவ்வாறு பேசினார். கடமை, கண்ணியம், கட்டுப்பாடு எவ்வாறு இல்லை என்பதையும் அவர் வரிசைப்படுத்தி கூறினார்.

பேரறிஞர் அண்ணா திமுகவை ஆரம்பிக்கும்போது கூறிய கொள்கை அவர் சொன்ன கடமை, கண்ணியம், கட்டுப்பாடு. புரட்சி தலைவர், திமுகவை விட்டு வெளியேறிய பிறகு, கட்சியை தனது குடும்பத்திற்கு கருணாநிதி தாரை வார்த்தார். அங்கேயே கடமை செத்துப்போய் விட்டது. 

பெண் என்றும் பார்க்காமல், சட்டசபையில், அம்மாவை அவமானப்படுத்தியபோது திமுகவின் கண்ணியம் செத்துப்போச்சு. சொந்த அண்ணன் என்றும் பார்க்காமல் சுயநலத்துக்காக சதி திட்டம் தீட்டி, மு.க.அழகிரியை, கட்சியைவிட்டு ஸ்டாலின் நீக்கினார். இன்று மு.க.அழகிரி சொல்கிறார், ஸ்டாலின் எப்போதும் போஸ்டரில்தான் முதலமைச்சர். கனவில் கூட முதலமைச்சராக முடியாது என்று சொல்கிறார். இதைப் பார்க்கும்போது, இதைப் பார்க்கும்போது திமுகவில் கட்டுப்பாடும் செத்துப்போச்சு. 

இப்போதுள்ள திமுக, அண்ணா கொண்டு வந்தது. திராவிட முன்னேற்ற கழகம் என்ற திமுகவும் இல்லை; கருணாநிதி நடத்தின திருக்குவளை மு கருணாநிதி என்ற திமுகவும் இல்லை. இப்போதுள்ள திமுக, எது கிடைத்தாலும், சுருட்ட வேண்டும் என்று நினைக்கிற திருடர்கள் முன்னேற்ற கழகம் என்ற திமுக. அந்த திருடர் கூட்டத்திற்கு தலைவர் மு.க.ஸ்டாலின். 

பிரதமர், உலகம் சுற்றி ஊழல் செய்கிறார். முதல்வர் ஊர் ஊராக சென்று ஊழல் செய்கிறார் என்று. உங்க அப்பா உட்கார்ந்த இடத்தில் இருந்தே ஊழல் செய்தார். சுயநினைவே இல்லாமல் சம்பளம் வாங்கினவர். இதைவிட பெரிய ஊழல் என்ன இருக்கு. கருணாநிதி கட்டுமரம் என்றால், ஸ்டாலின் பிட்டுமரம். இவர்களால் மக்களுக்கு எந்த பிரயோஜனமும் இல்லை என்றார்.

Exit mobile version