பெட்ரோல் டீசல் விலையில் தி.மு.க வின் பித்தலாட்டம் அம்பலம் ! அன்று GSTக்குள் வேண்டும்! இன்று வேண்டாம்!

தேர்தலுக்கு முன் பெட்ரோல், டீசலை GST வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் என்றனர். இப்போது மோடி அரசு அதற்கு வழிவகை செய்தால் கடுமையாக எதிர்க்கின்றனர்.

பெட்ரோல், டீசல் மீது உயர்த்தப்பட்ட கலால் வரியை குறைத்தாலோ அல்லது ஜிஎஸ்டி வரிவிதிப்பின் கீழ் கொண்டுவந்தாலோ, மக்களுக்கு குறைந்த விலையில் பெட்ரோல், டீசல் விற்பனை செய்ய முடியும் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

திமுக தலைவர் எதிர்கட்சி தலைவராக இருந்த வேளையில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை தினமும் உயர்த்துவதை கண்டித்து ஓர் அறிக்கை வெளியிட்டார். ஜனவரி 25, 2018, அன்று

அந்த அறிக்கையில் ; கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, தற்போது, பெட்ரோல்,டீசல் விலை உயர்ந்தியிருப்பது குறித்து, மத்திய பாஜக அரசும் கண்டுகொள்ளவில்லை, இங்குள்ள அதிமுக அரசும் வரிக்குறைப்பின் மூலம் மக்களுக்கு குறைந்த விலையில் பெட்ரோல், டீசல் கிடைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க முன்வரவில்லை என்பது கண்டனத்திற்குரியது.

மத்திய பா.ஜ.க. அரசு தினசரி விலை நிர்ணயம் செய்யும் கொள்கை முடிவை உடனே திரும்பப் பெற வேண்டும். மத்திய நிதி நிலை அறிக்கையில் பெட்ரோல், டீசல் உயர்வைக் கட்டுப்படுத்திடவும், நியாயமான விலையில் பெட்ரோல், டீசல் மக்களுக்குக் கிடைப்பதற்கும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க முன் வர வேண்டும்.

கலால் வரியை குறைத்தாலோ அல்லது ஜி.எஸ்.டி. வரிவிதிப்பின்கீழ் கொண்டுவந்தாலோ, மக்களுக்கு குறைந்த விலையில் பெட்ரோல், டீசல் விற்பனையை நிச்சயமாக உறுதி செய்ய முடியும். என கூறினார்.

இந்த நிலையில் ஜிஎஸ்டிக்கு வெளியே இருந்த டீசல் பெட்ரோலை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருந்தார். இது வரை தர்மேந்திர பிரதான் (முன்னாள் பெட்ரோலிய அமைச்சர்) இதை பற்றி பேசி வந்திருந்தாலும், இம்முறை நிதி அமைச்சரே நேரடியாக பேசியது மக்கள் மனதில் நம்பிக்கை அளித்தத்து.

சர்வதேச சந்தையில் கச்சா விலையும் அதிகரித்து வருவதால், இந்தியாவில் இனி டீசல் பெட்ரோல் விலை ஏறுமுகமாக இருக்க வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக டீசல் பெட்ரோலை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர, மத்திய அரசு முயற்சிகளில் இறங்கியுள்ளது.

பெட்ரோல் டீசல் ஜிஎஸ்டிக்குள் கொண்டுவருவதற்கு ஜிஎஸ்டி குழுவின் 75% அனுமதி பெற வேண்டும். அதற்காக ஜிஎஸ்டி குழு கூட்டம் நடைபெற்றது. டீசல் பெட்ரோலை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர பல மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். முக்கியமாக தமிழக விடியல் அரசின் நிதியமைச்சர் கூட்டத்திற்கு போகாமல் வளைகாப்பிற்கு சென்றுவிட்டார்.

எதிர்க்கட்சியாக இருக்கும் போது பெட்ரோல் டீசல் விலையினை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவர வேண்டும் ஆளுங்கட்சியாக வந்த பிறகு பெட்ரோல் டீசல் விலையினை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவரக்கூடாது என திமுகவின் பித்தலாட்டம் தற்போது வெளியாகி உள்ளது.

இதனை தொடர்நது தமிழக விடியல் ஆட்சியினை நெட்டிசன்கள் வாழ்த்தி வருகிறார்கள். அதிலும் விடியல் ஆட்சியின் நிதி அமைச்சரை வளைகாப்பிறகு அடுத்த கூட்டத்திற்க்கு பிறக்கும் பிள்ளைக்கு பெயர் வைக்க போய்விடுவார் என வாழ்த்தி வருகின்றார்கள்.

Exit mobile version