இந்தியாவின் 15வது குடியரசுத் தலைவராக பதவியேற்றார் திரௌபதி முர்மு…

திரௌபதி முர்மு இன்று (ஜூலை 25, 2022) இந்தியாவின் 15வது குடியரசுத் தலைவராகப் பதவியேற்று, நாட்டின் மிக உயர்ந்த பதவியை வகிக்கும் முதல் பழங்குடியினப் பெண்மணி ஆனார். இந்திய குடியரசுத் தலைவர். சுதந்திர இந்தியாவில் பிறந்த முதல் இந்திய குடியரசுத் தலைவர் என்ற பதிவையும் பதித்திருக்கிறார் இந்திய குடியரசுத் தலைவரும் நாட்டின் முதல் குடிமகளுமாக பதவியேற்றிருக்கும் மாண்புமிகு திரெளபதி முர்மு. மாண்புமிகு குடியரசுத் தலைவர் இன்று நாட்டின் 15வது குடியரசுத் தலைவராக பதவியேற்றார். அவருக்கு சர்வதேச தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஜூலை 18ம் தேதியன்று நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தலில் தனது போட்டியாளரான யஷ்வந்த் சின்ஹாவை எதிர்த்து வரலாற்று சிறப்புமிக்க வெற்றியைப் பதிவு செய்தார் திருமதி திரெளபதி முர்மு. வெற்றி பெற்ற மூன்று நாட்களுக்குப் பிறகு பதவியேற்பு விழா, டெல்லியில் உள்ள நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் நடைபெற்றது.

ஜார்க்கண்ட் மாநில முன்னாள் ஆளுநர் திரௌபதி முர்முவுக்கு, தலைமை நீதிபதி என்வி ரமணா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார், தலைமை நீதிபதி பதவிப் பிரமாணம் செய்து வைத்த பிறகு, குடியரசுத் தலைவர் மாண்புமிகு திரெளபதி முர்மு தனது முதல் உரையாற்றினார்.

64 வயதான மாண்புமிகு திரெளபதி முர்முவை, பிரதமர் நரேந்திர மோடி, துணைக் குடியரசுத் தலைவர் மற்றும் மாநிலங்களவைத் தலைவரும், குடியர்சு துணைத் தலைவருமான எம்.வெங்கையா நாயுடு மற்றும் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா ஆகியோர் நாடாளுமன்ற மத்திய மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர்.

குடியரசுத் தலைவர் தேர்தலில் பதிவான செல்லுபடியான 3219 வாக்குகளில் திரௌபதி முர்மு 2161 வாக்குகள் பெற்றார். யஷ்வந்த் சின்ஹா 1058 வாக்குகள் பெற்றிருந்தார்.

இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவி காலம் நேற்றுடன் (2022, ஜூலை 24) முடிவடைந்த நிலையில், இன்று நாட்டின் 15வது குடியரசுத் தலைவராக மாண்புமிகு திரெளபதி முர்மு பதவியேற்றுக் கொண்டார். பதவியேற்றுக் கொண்ட அவர் தனது முதல் உரையை ஆற்றினார்.

Exit mobile version