நடிகர் சூர்யா ஜோதிகா தயாரிப்பில் உருவான படம் ஜெய் பீம். இது வர்த்தக ரீதியில் வெற்றி பெற்றது. மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனமான அமேசான் நிறுவனத்திற்கு விற்கப்பட்டு நல்ல லாபம் சம்பாதித்துள்ளது சூர்யா குடும்பம். ஒரு உண்மை சம்பவத்தை வைத்து எடுக்கப்பட்ட படம் ஜெய் பீம் பல விமர்சனங்ளை சந்தித்தது. உண்மைகள் மறைக்கப்பட்டது யாரையோ கொண்டாடுவதற்காக உண்மை போராளிகள் மறைக்கப்பட்டன. உணமையான குற்றவாளி பெயரை சொல்லவில்லை என பல உண்மைகளை திரித்து எடுக்கப்பட்ட படம் தான் ஜெய் பீம்.
இதே போன்று கேரளாவில் மிகப்பெருமளவில் பேசப்பட்ட குற்றவாளியும், இந்தியளவில் காவல் துறையால் தேடப்பட்ட குற்றவாளி சுகுமார குருப்பின் இன் கதையை மையமாக கொண்டு உருவாகி உள்ள படம் ‛குரூப்’. ஶ்ரீநாத் ராஜேந்திரன் இயக்க, குரூப்பாக துல்கர் சல்மான் நடித்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் இந்த படம் குறித்து துல்கர் சல்மான் கூறுகையில், இயக்குநர் ஶ்ரீநாத் ராஜேந்திரன் மற்றும் நானும் இணைந்து தான் திரைத்துறைக்குவந்தோம். நானும் இயக்குனரும் மிக நெருங்கிய நண்பர்கள், எங்களது முதல் படத்திலேயே ‘குரூப்’ பற்றி நிறைய விஷயங்களை பேசிக்கொண்டிருப்ப்போம். திரைக்கதை ஸ்டைலே புதிதாக இருந்தது. குரூப் குடும்பத்திலிருந்து ஏதாவது பிரச்னை வரும் என்ற யோசனை இருந்தது. நல்ல வேளை எந்த ஒரு தடையும் வரவில்லை.
மூன்று வருட ஆராய்ச்சிக்கு பிறகு தான் திரைக்கதையை அமைத்தோம். ஒவ்வொரு நடிகர்களுமே உண்மையில் வாழ்ந்தவர்களை பிரதிபலித்துள்ளார்கள். அந்த கால கட்டத்தை கொண்டு வருவது எல்லாம் மிக கடினமாக இருந்தது. அந்த கால மும்பையை எல்லாம் திரும்ப திரையில் கொண்டு வந்திருக்கிறோம். ‘குரூப்’ எனக்கு மிக சவாலாக இருந்த படம் என் வாழ்வில் மிக முக்கியமான படமும் கூட. ரசிகர்களுக்கு மிகச்சிறந்த அனுபவத்தை தரும் என்றார்.
மேலும் சுகுமார குரூப் குடும்பத்திலிருந்து ஏதாவது பிரச்னை வரும் என்ற யோசனை இருந்தது. நல்ல வேளை எந்த ஒரு தடையும் வரவில்லை! ஆனால் விக்டிம் குடும்பத்திலிருந்து எவரும் பாதிக்கப்படக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருந்தோம். படம் உருவான பிறகு அவர்களை அழைத்து, படத்தை போட்டுக்காட்டினோம். உங்களுக்கு தவறாக எதாவது தோணினால் சொல்லுங்கள் மாற்றி விடுகிறோம் என்றோம். அவர்கள் மனதின் வலியை வைத்து கொண்டு பணம் சம்பாதிப்பது எங்கள் நோக்கமில்லை. அவர்களுக்கு படம் பிடித்திருந்தது அதுவே எங்களுக்கு மகிழ்ச்சி தான்
இது ஒருபுறம் சூர்யாவிற்கு மேலும் அழுத்தத்தை உண்டாக்கியுள்ளது அதாவது பாதிக்கப்பட்டவர்களின் மனதின் வலியை வைத்து பணம் சம்பாதிப்பது தவறு அதுவும் தங்களின் நோக்கமில்லை என துல்கர் குறிப்பிட்டதும், பாதிக்கப்பட்டவர்களுக்கு படத்தை போட்டு காட்டியதையும் குறிப்பிட்டு சூர்யாவை வச்சு செய்து வருகிறார்கள். மேலும் ஜெய் பீம் படத்தில் உண்மை கதை என கூறி குற்றவாளியை தண்டிக்க நீதிமன்றம் வரை சென்று போராடிய வன்னியர்களைகுற்றவாளியாக சித்தரித்துளார்கள்.
அதோடு படத்தை வைத்து கோடிக்கணக்கில் பணமும் சாம்பாதித்து உள்ளீர்கள்.மேலும் இல்லாத பவுண்டேசனுக்கு 1 கோடி கொடுத்து விளம்பரம் செய்து கொண்டீர்கள். ஆனால் இன்னும் குடிசையில் வாடும் கொலை செய்யபட்டவரின் குடுபம்பத்தினை பற்றி நினைத்து கூட பார்க்கவில்லை.
நீங்கள் எந்த பெரிய உதவியும் செய்யவில்லை, மாறாக நடிகர் லாரான்ஸ் பாதிக்கப்பட்டவரின்குடும்பத்திற்கு பணத்திற்காக உண்மை கதையை தவறாக சித்தரிக்காமல் துல்கரிடம் சென்று பாடம் கற்று கொண்டு வாருங்கள். உண்மை கதை என சொல்லிவிட்டு போலியாக காட்சிகளை வைக்காதீர்கள் என வெளுத்து எடுத்து வருகின்றனர் நெட்டிசன்ஸ்.