துணை முதல்வராகும் வாரிசு! முதல்வரின் வெளிநாட்டு சுற்றுப்பயணத்திற்கு முன் வெளியாகும் அறிவிப்பு!

தமிழகத்தில் திராவிட முன்னேற்ற கழகத்தின் ஆட்சி நடைபெற்று வருகிறது, திமுக கட்சியில் பெரிய பெரிய பொறுப்புகளில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் குடும்பத்தினரே உள்ளார்கள். கருணாநிதி உயிரோடு இருக்கும் போதே துணை முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார் கருணாநிதி மகன் ஸ்டாலின். இன்னொரு மகன் அழகிரியை மத்திய அமைச்சராக்கினார். மேலும் மகள் கனிமொழியையும் நாடளுமன்ற உறுப்பினராக்கியம் கட்சியின் மகளிர் அணி தலைவராகவும் அழகு பார்த்தார். கருணாநிதி. இதோடு முடியவில்லை தயாநிதி மாறனையும் மத்திய அமைச்சர் ஆக்கினார்..

கருணாநிதி மறைவுக்கு பிறகு தமிழகத்தின் முதல்வராக ஸ்டாலின் பதவி ஏற்றார்.ஸ்டாலினும் கருணாநிதி போன்று தன மகனுக்கு இளைஞரணி செயலாளர் பதவி தந்தார். எம்.எல்.ஏ ஆக்கினார்,தற்போது உதயநிதி துணை முதல்வர் ஆகிறார் என்ற செய்தி கசிந்துள்ளது. என் வாரிசு அரசியலுக்கு வாராது என பேசிய ஸ்டாலின் தற்போது தன் வாரிசை துணை முதல்வராக அமர்த்துகிறார். இதுதான் திமுக விடியல் அரசின் சாதனை.

மேலும் கிடைத்த தகவல்கள்படி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிந்த பின், அமைச்சர்களின் இலாகாக்களில் அதிரடி மாற்றம் நிகழும் என்ற பேச்சு, கோட்டை வட்டாரங்களில் இறக்கை கட்டி பறக்கிறது. சரியாக செயல்படாத அமைச்சர்களிடம் இருந்து, முக்கிய இலாகாக்கள் பறிக்கப்பட்டு, வேறு சில அமைச்சர்களிடம் கூடுதலாக ஒப்படைக்கப்பட உள்ளன.

தி.மு.க. இளைஞரணி செயலர் உதயநிதிக்கு, அமைச்சர் பதவி வழங்க ஆலோசனை நடந்த நிலையில், தற்போது துணை முதல்வர் பதவி வழங்கவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறதாம். இதற்காக, மாணவர்கள், இளைஞர்களை கவரும் வகையில் புதிய இலாகாக்களை உருவாக்கி, அவரிடம் ஒப்படைக்கவும் மேலிடம் திட்டம் தீட்டியுள்ளதாம்.கடந்த 2006 – 11 தி.மு.க., ஆட்சியில் முதல்வராக கருணாநிதியும், துணை முதல்வராக ஸ்டாலினும் இருந்தனர்.

துணை முதல்வராக உதயநிதி பொறுப்பேற்ற பின், முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு சுற்றுப்பயணம் செல்ல திட்டமிட்டுள்ளார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.

Exit mobile version