ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற திட்டம் குறித்து இந்திய நாட்டின் பிரதமர் மோடி தலைமையிலான அரசு வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இது குறித்து பிரதமர் மோடி அவர்கள் இந்திய அரசியல் சாசன நாளில் கடந்த நவம்பர் 26 ஆம் தேதி பேசுகையில் ஒவ்வொரு சில மாதங்களிலும் பல தேர்தல்கள் நடத்தப்படுகின்றன. இதனால் நாட்டின் வளர்ச்சி பணிகள் பாதிக்கப்படுகின்றன. எனவே ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பதை நடைமுறையில் கொண்டுவந்து நாட்டின் வளர்ச்சியை துரிதப்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.
மேலும் இரண்டு முறை தேர்தல் நடத்துவதால் இரண்டு வாக்காளர் பட்டியல் தயாரிப்பது காலம், பொருள் மற்றும் மக்களின் உழைப்பு ஆகியவை வீணாவதாகவும் அந்த சக்திகள் வீணாவதை தடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். லோக்சபா, சட்டசபை அதிகாரிகளை உள்ளடக்கிய தலைமை அதிகாரிகள் மாநாட்டில் கலந்து கொண்டு பேசியபோதே மோடி இதை தெரிவித்து உள்ளார்.
சேலத்தில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் தேர்ந்தெடுத்த மக்களுக்கு நன்மை செய்யாமல் திமுக அரசு தொடர்ந்து அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு தொல்லை கொடுப்பதை வாடிக்கையாக வைத்துள்ளதாக அதிமுக இணைஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் சேலம் மாவட்டம் ஓமலூரில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது மாவட்டத்தில் 16 ஊராட்சி ஒன்றியங்களில் 35 இடங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதையொட்டி அதிமுக நிர்வாகிகளுக்கு அவர் ஆலோசனைகளை வழங்கினார்.
கூட்டத்தில் உரையாற்றிய அவர் ஊரக உள்ளாட்சி தேர்தலில் தேனீக்கள் போல் செயல்பட்டு சிதறாமல் வாக்குகளைப் பெறவேண்டும் என்று நிர்வாகிகளை ஊக்கப்படுத்தி பேசினார்.
நீட் தேர்வு விலக்குக்காக அதிமுக கொண்டு வந்த அதே தீர்மானத்தையே திமுகவும் கொண்டுவந்துள்ளது.நகை கடன் தள்ளுபடிக்காடான வாக்குறுதியை திமுக நிறைவேற்றவில்லை.நகை கடன் தள்ளுபடி வாக்குறுதியை நம்பி ஏராளமானோர் நகையை அடமானம் வைத்துள்ளனர்
எந்த கூட்டுறவு சங்கத்தில் முறைகேடு நடந்தது என்பது குறித்து தெளிவாக இல்லை.திமுக எப்போதும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாது.9 மாவட்டத்திலும் கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளோம்.வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தல் வருவதற்கான வாய்ப்பு உள்ளதாக அவர் தெரிவித்தார்.
புதிதாக கட்டப்பட உள்ள நாடாளுமன்றத்தில் 1000 எம்பிக்கள் உட்காரும் அளவிற்கு இடம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.எம்பிக்கள் எண்ணிக்கை உயர்ந்தால் எம்எல்ஏக்களும் உயர்வார்கள் என்று கூறினார்.
விரைவில் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு தேர்தல் வரும். அனைவரும் தயாராக இருக்க வேண்டும்.ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவினர் தேனீக்கள் போல செயல்பட்டு தேர்தல் பணியாற்ற வேண்டும்.ஆயிரம் பேர் அமரக்கூடிய வகையில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டு வருவதால், எம்பிக்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
நெல் கொள்முதல் நிலையங்களில் மழையில் நனைந்து ஒரு லட்சம் நெல் மூட்டைகள் வீணாகி உள்ளதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.-அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர்,முன்னாள் முதல்வரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி பேச்சு.