கல்வி என்னும் வியாபாரம் சிறப்பு கட்டுரை.

கல்வி அனைவருக்கும் சமம்..அனைவரும் கட்டாயம் கல்வி கற்க வேண்டும் என நினைத்தார் காமராசர்.

கஞ்சி ஊத்தினால் பள்ளிக்கு வருவாயா?
என்று கேட்டார் பெருந்தலைவர்..
ஆனால் இன்று காசு கட்டினாயா? என கேட்கிறது..பெரிய கல்வி நிறுவனங்கள்..

பிழை எங்கு முதலில் துவங்குகிறது?

பெற்றோர்கள் அக்கம் பக்கம் வீட்டை பார்த்து நம் பிள்ளையும் அந்த பிள்ளை படிக்கும் பள்ளியில்தான் சேர்க்க வேண்டும் என்று எண்ணுவது..

பள்ளிகள் தரமாக இருந்தால் மட்டுமே பிள்ளைகள் நன்றாக படிப்பார்கள் என்று நம்புவது..

கல்வியை தவிர வாழ்வில் வேறு ஒன்றுமே இல்லை என்ற மன நிலையில் பெற்றோர்கள் இருப்பதும்,பிள்ளைகளின் கல்வியை பற்றி மட்டுமே சிந்திப்பது..

இதுதான் முதலில் தனியார் கல்வி நிறுவனங்கள் உங்களை அவர்கள் வசம் ஈர்க்க முதல் வழி…

எல்லா நிலையிலும் உள்ளவர்கள் தங்கள் பிள்ளைகளை பெரும்பாலும் பணம் கட்டியே படிக்க வைக்கின்றனர்..

பணம் கட்டி நிறைய மதிப்பெண் எடுக்கும் பிள்ளைகளை விட,மதிப்பெண் குறைவாக எடுக்கும் பிள்ளைகளே அதிகம்..இப்போது அந்த பணம் என்ன ஆனது..சிந்தியுங்கள்..

கல்வி நம்மை ஒழுக்க நிலையில் நிற்க வைக்கவே..மதிப்பெண் அடிப்படையில் அல்ல..என்பதை யாரும் உணர்வதில்லை..
காரணம் அப்படி ஒரு சூழலை இங்கு உருவாக்கி உள்ளார்கள்..

Everyone is a genius. But if you judge a fish by its ability to climb a tree,it will live its whole life believing that it is stupid.
-Albert Einstein

ஐன்ஸ்டீன் கூறியது போல “ஒரு மீன் சற்று தூரம் மரம் ஏறும் திறன் உள்ளது”..அதற்கு மீன் மரத்திலே வாழ்ந்தால் தான் அது திறமையான மீன் என்று சொன்னால் அது தவறான சிந்தனை.அதுபோல்தான் நம் கல்வி முறையும், பெரும்பாலான ஆசிரியர்கள்,பெற்றோர்களின் மன நிலையும் உள்ளது..

கொரோணா என்னும் பெரும் ஆபத்து காலத்தில்,பலரும் வாழ்வாதாரம் சரிசெய்ய போராடும் காலத்தில் இணையம் வழி கல்வி (Online) வகுப்பு என்ற பெயரில் பல கல்வி நிறுவனங்கள் கட்டண வசூலில் இறங்கி உள்ளனர்…

ஒரு குறிப்பிட்ட காலம், எல்லாம் சீர் ஆகும் வரை நம் பிள்ளைகள் பள்ளிக்கு செல்லாத நிலை உள்ளதால் அவர்கள் கல்வி ஒன்றும் பாதிப்பு அடையாது பெற்றோர்களே!!..நம்புங்கள்..

மீண்டும் நிலைமை சரி ஆகி பிள்ளைகள் பள்ளிக்கு செல்லும்போது எல்லாம் பழையபடி தானாக படிக்க தொடங்குவார்கள்..

பிஞ்சுகளை கல்வியில் பயணிக்க போராடுகிறோம் என்ற பெயரில் மனது அளவில் அவர்களைபாதிப்புக்கு உள்ளக்காதீர்கள்…

கல்விதான் நமக்கு பணம் ஈட்ட உதவுமே தவிர,
கல்வியை பணம் கட்டி வாங்குவது என்பது
நம்மை நாமே ஏமாற்றி கொள்ளும் தன்மை…

சிலர் யோசிக்கலாம்..அரசு பள்ளி தரமாக இருந்தால் நாங்கள் ஏன் தனியார் பள்ளிக்கு செல்ல போகிறோம் என்று..
அரசு பள்ளி பற்றி அடுத்த பதிவில் பேசுவோம்..

முதலில் நம்மை நாம் மாற்றிக்கொள்ள முயல்வோம்..நம்மை என்பது பெற்றோர்களை குறிக்கும்..

Online வகுப்பு என்பது வெறும் கட்டண வசூல் மையமே!! விலகி இருங்கள்..சற்று நாள் கல்வி வசூலில் இருந்து தள்ளியே இருங்கள்!!

கட்டுரை- சமூக சிந்தனையாளர் அருணகிரி சிதம்பரநாதன்.

Exit mobile version