சென்னை முத்தியால்பேட்டை மசூதியில் மறைந்திருந்த வெளிநாட்டினர் 8 பேர்‌ கைது!

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா இந்தியவையும் விட்டுவைக்கவில்லை இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 306 பேர் உயிர் இழந்துள்ளார்கள். தமிழகத்தை பொறுத்தவரை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளார்கள் 11 பேர் உயிரிழந்துளார்கள்.

இந்த நிலையில் கொரோன வைரஸ் இந்தியா முழுவதும் பரவ காரணமாக இருந்த டில்லியில் நடந்த தப்லிக் – இ – ஜமாத் மாநாட்டில் பங்கேற்ற பலருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து நாடு முழுவதும் உஷார்படுத்தப்பட்டு மாநாட்டில் பங்கேற்றவர்கள் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தும் முயற்சியில் மத்திய மாநில அரசுகள் இறங்கின. மாநாட்டில் பங்கேற்றவர்கள் தாமாக முன்வந்து பரிசோதனை செய்யும்படியும் கேட்டுகொள்ளப்பட்டனர் இந்த மாநாட்டில் நாடு முழுவதும் இருந்து கிட்டத்தட்ட 8 முதல் 10 ஆயிரம் நபர்கள் பங்கேற்றதாகக் கூறப்படுகிறது.

இந்த மாநாட்டில் அமெரிக்கா, இந்தோனேஷியா, வங்கதேசம், மலேசியா, இலங்கை, பிலிப்பின்ஸ், பிரிட்டன், சீனா, எத்தியோப்பியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் சுமார் 960 நபர்கள்கலந்து கொண்டுள்ளார்கள்.தப்லிக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்ற வெளிநாட்டினருக்கு ஏற்கெனவே கொரோனா தொற்று இருந்துள்ளது இதை மறைத்து, மாநாட்டில் கலந்து கொண்டுள்ளார்கள். இதன் காரணமாக பிறருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

டெல்லி மாநாட்டில் பங்கேற்ற வெளிநாட்டினர் இந்தியா முழுவதும் பல்வேறு நகரங்களுக்கு மத பிரசாரம் செய்வதற்காக சுற்று பயணம் மேற்கொண்டுள்ளது தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்களுக்கு கொரோனா தொற்று இருந்த காரணத்தினால் அந்த மாநாட்டில் கலந்து கொண்டவர்களை கண்டறிந்து கொரோனா சிகிச்சை அளிக்கும் நடவடிக்கையில் மத்திய மாநில அரசுகள் ஈடுபட்டுள்ளது. மாநாட்டில் பங்கேற்றவர்கள் சுற்றுலா விசாவில் வந்து மத பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்கள்

இதனை தொடந்து வெளிநாடுகளில் இருந்து வந்த 960 பேரின் விசாக்களையும் மத்திய அரசு முன்பு ரத்து செய்தது. இந்த நிலையில் கொரோனா சிகிச்சைக்கு வராமல் இருக்கும் வெளிநாட்டினரை தேடும் பணியை முடுக்கியது மத்திய அரசு, தாமாக சிகிச்சைக்கு முன் வராமலும், தலைமறைவாக இருப்பவா்கள் மீதும் பேரிடா் மேலாண்மைச் சட்டம், தொற்றுநோய் பரவல் சட்டம், வெளிநாட்டினா் சட்டம் ஆகியவற்றின் கீழ் நடவடிக்கை எடுக்க மத்திய அரசு உத்தரவிட்டது.

மறைந்திருப்பது தங்கியிருப்பது காவல்துறைக்கு தெரியவந்தது. இதனை தொடர்ந்து வெளிநாட்டினர் தங்கி இருந்த இடத்திற்கு விரைந்தது காவல்துறை அங்கு எத்தியோப்பியாவைச் சேர்ந்த 8 பேரையும் மீட்டு, திருவல்லிக்கேணி அரசு பல்நோக்கு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர் .

சட்ட விரோதமாக தங்கி 8 போ் மீதும் தொற்றுநோய் பரவல் சட்டம், வெளிநாட்டினார் சட்டம், பொது சுகாதாரத்துறை சட்டம் ஆகியவற்றின் கீழ் முத்தியால்பேட்டை காவல்துறை அவர்கள் மீது வழக்குப் வழக்கு பதிந்தது, அதனை தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றது.

Exit mobile version