அமலாக்கத்துறை அதிரடி.. சிக்கலில் அமைச்சர் பொன்முடி..அடுத்தடுத்து அடிக்க காத்திருக்கும் அமலாக்கத்துறை

ponmudi ed

ponmudi ed

அமலக்கத்துறையின் பிடியில் திமுக அமைச்சர்கள் வரிசையாக சிக்கி வருகின்றார்கள். மாவட்ட நீதிமன்றங்களில் விடுவிக்கப்பட்ட வழக்குகளை உயர்நீதிமன்றம் தாமாக வந்து மீண்டும் விசாரிக்க ஆரம்பித்துள்ளது. இது தி.மு.கவுக்கு பெரும் சிக்கலை உருவாக்கியுள்ளது.

சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன் ஆகியோர் விடுவிக்கப்பட்டது தொடர்பான தீர்ப்பை படித்துவிட்டு 3 நாட்களாக உறங்க முடியவில்லை என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கவலை தெரிவித்துள்ளார்.

ஒருபக்கம் தமிழகத்தில் நிலவும் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஒருபக்கம் கஜானாவில் பணம் இல்லாத பிரச்சனை என திமுக அரசு தள்ளாடி வரும் நேரத்தில் அமலாக்கத்துறையின் நடவடிக்கையும் அமைச்சர்கள் மீதான நீதிமன்ற வழக்குகளும் பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் செம்மண் முறைகேடு தொடர்பாக அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கவுதம சிகாமணிக்கு எதிராக 90 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையை அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ளது.

2006 முதல் 2011 வரை திமுக ஆட்சியின் போது கனிம வளத்துறை அமைச்சராக இருந்த பொன்முடி, தனது அதிகாரத்தை பயன்படுத்தி முறைகேடாக செய்ததாக புகார் எழுந்தது. தனது மகன் கவுதம சிகாமணி மற்றும் உறவினர்களுக்கு செம்மண் குவாரி வழங்கியதாகவும், இதன் மூலம், அனுமதிக்கப்பட்ட அளவை விட சட்டவிரோதமாக செம்மண் எடுத்து, அரசுக்கு ரூ. 28 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக குற்றம்சாட்டி, விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் கடந்த 2012-ல் வழக்குப் பதிவு செய்தது

இந்த வழக்கு விசாரணை நடந்து வரும் நிலையில், கடந்த மாதம் அமலாக்கத்துறையினர் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகனுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது, கணக்கில் வராத ரொக்கமும், வெளிநாட்டு கரன்சிகளும் சிக்கியது. இதைத் தொடர்ந்து, அமலாக்கத்துறை அவரிடம் 2 நாட்கள் விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில், கள்ளக்குறிச்சி திமுக எம்பி கவுதம சிகாமணி மற்றும் உறவினர் ஜெயச்சந்திரன், ராஜமகேந்திரன், கோபிநாத், கோதகுமார், சதானந்தன், லோகநாதன் உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த குற்றப்பத்திரிக்கை காரணமாக அமைச்சர் பொன்முடிக்கு நெருக்கடி கொடுத்த அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Exit mobile version