வீடுதோறும் வேல் வைத்தோம் வீடு தோறும் விநாயகர் வைப்போம் !! விநாயகர் சதுர்த்தி சிறப்பாக கொண்டாடுவோம்!

பொது இடங்களில் விநாயகச் சிலைகள் வைக்க தமிழக அரசு தடை விதித்துள்ளது.கரொனா வைரஸ் காரணம் காட்டி அரசு இந்த முடிவு எடுத்திருக்கிறது. இந்த முடிவு வரவேற்கத் தக்க முடிவுவாகும். மேலும் இந்து முன்னணியினர் தடை மீறி விநாயகச் சிலைகளை வைக்கப் போவதாக தெரிவித்து உள்ளார்கள். இதை இந்து முன்னணியினர் என்று அலட்சியமாக இருந்து விடக்கூடாது. காரணம் பல வருடங்களாக கிராமங்கள் முதல் நகரங்கள் வரை விநாயகச் சதுர்த்தி சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்த வருடம் தடை என்பதை இந்து முன்னணி யினர் தமக்கு சாதகமாக்கக் கூடும்.

ஏனென்றால் அரசியலையும் தாண்டி விநாயகா் சிலை பிரதிஷ்டையும் அதனையொட்டிய ஊா்வலங்களும் தமிழகத்தில் பலராலும் அங்கீகரிக்கப்பட்ட நிலை. அதனால் நிச்சயம் இந்து அமைப்புகள் நீதிமன்றத்தை நாடக் கூடும் அதில் சில நிபந்தனைகளுடன் சிலைகள் வைக்க அனுமதி பெறலாம். அனுமதி கிடைக்க வில்லையெனில் அதற்கு பதில் வீடுகள் தோறும் விநாயகா் பூஜைகள் அதனையொட்டிய வைபவங்கள் விழிப்புணா்வு பிரசுரங்கள் வழங்குவது இதையெல்லாம் இந்து முன்னணி முன்னெடுத்து செல்லலாம்.

வேல் பூஜை அவர்களுக்கு உற்சாகம்தந்தது போல் விநாயகா் பூஜைகளும் அதுபோன்றதொரு எழுச்சியை தரலாம். அரசியல் ரீதியாக கூட அது ஏற்றத்தை தரலாம். மாறாக தடையை மீறுவது ஊா்வலம் செல்வது அப்புறம் கலவரம் அடிதடி என்று பாதிக்கப்படுவது நாமாக இருக்கலாம் காரணம் கசப்பான பல வரலாறுகளும் முன் காலத்தில் நடந்திருப்பதால். மற்றொன்று அரசு தடையால் விநாயகா் சிலைகள் வைப்பது தடுக்க முடியுமா என்று தெரியவில்லை .நம்மூா் சிறுவர்கள் சொந்த கை வண்ணத்தில் சிலையை தயாா் செய்து பூஜிக்கும் பணியிலும் இறங்கிவிட்டாா்கள். ஆக அரசுக்கு எதிராக கொம்பு கோா்த்து இழப்புகளை ஏற்படுத்தாமல் அதையும் சாதகமான படிக்கற்களாக மாற்றி ஆக்கப்பூா்வமாக சிந்தனை செய்து முன்னேறுவதே சிறப்பு.

தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய விழா ஜூலை 26ம் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி வரை நடைபெற்றது. கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களும் மூடப்பட்டுள்ள நிலையில் தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய விழா நடை பெறுவதற்கு காரணமாக தமிழக அரசு சில கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கியது குறிப்பிடதக்கது.

வீடுதோறும் வேல் வைத்தோம் வீடு தோறும் விநாயகர் வைப்போம் !! விநாயகர் சதுர்த்தி சிறப்பாக கொண்டாடுவோம்!

Exit mobile version