இந்திய கிரக்கெட்அணியின் முன்னாள் வீரர் லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன் இன்று பாஜக கட்சியில் இணைந்தார்.
கடந்த 1983-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியில் அறிமுகமானவர் லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன் . சுழற்பந்து வீச்சாளரான இவர் இதுவரை இந்திய அணிக்காக 9 டெஸ்ட்போட்டிகளிலும், 16 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். இதில் டெஸ்ட் போட்டிகளில் 130 ரன்களும் 26 விக்கெட்டுகளும் கைப்பற்றியுள்ளார்.
டெஸ்ட் போட்டிகளில் 64 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகளும், ஒருநாள் போட்டிகளில் 35 ரன்கள் கொடுத்து 3விக்கெட்டுகள் கைப்பற்றியது இவரது சிறந்த ஆட்டமாகும். இவர் கடைசியாக கடந்த 1985-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் விளையாடினார்.
அதன்பிறகு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வந்த அவர், 1987-ம் ஆண்டு மும்பை வான்கடே மைதானத்தில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக தனது கடைசி டெஸ்ட் போட்டியில் பங்கேற்றார். ஓய்வுக்கு பிறகு வர்ணனையாளராக செயல்பட்டு வந்த அவர் தற்போது பாஜக கட்சியின் இணைந்துள்ளார்.