பிள்ளையார் சிலைக்கு யானை வெடிவச்சு சிலையை சுக்குநூறாக்கியவன் நான்! ஆ.ராசாவின் ஆணவ பேச்சு!

பிள்ளையார் சிலைக்கு யானை வெடிவச்சு சிலையை உடைத்தவன் நான்! விபூதிகளை எல்லாம் தூக்கிப் போட்டேன். அது உடைந்து சிதறியது, பின் அது பெரிய பிரச்சனை ஆயிடுச்சு. அதெல்லாம் ஒரு காலம்..

திமுக என்றால் இந்துக்களுக்கு விரோதி என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகிறது. தி.மு.க வரலாற்றில் இந்து மத பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவித்தது இல்லை.மேலும் இஸ்லாமிய மற்றும் கிறிஸ்துவ மத பண்டிகளுக்கு வாழ்த்து தெரிவிப்பார்கள் இந்து பண்டிகை என்றால் அதை விடுமுறை தினம் என்று அழைப்பார்கள். மேலும் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இந்துக்கள் பண்டிகையின் போது கோவில்கள் அடைக்கப்பட்டது. காரணம் கொரானா என கூறப்பட்டது. ஆனால் மற்ற மத பண்டிகைகள் போது பல கட்டுப்பாடுகள் நீக்கப்ட்டது. இதை சுட்டி காட்டிவருகிறது பாஜக.

அதேபோல் பல்வேறு மாநிலங்களில் பெட்ரோலுக்கான மாநில வரி குறைக்கப்பட்டுள்ளது, அதேபோல் தமிழக அரசும் அந்த வரியை குறைக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. அதிமுக எதிர்க்கட்சியாக இருந்தாலும் உண்மையான எதிர்க்கட்சி பாஜகதான் என்பதை கட்டமைக்கும் வகையில் பாஜகவினர் தொடர்ந்து திமுக அரசைகடுமையாக எதிர்த்து வருகின்றனர்.

அந்த வகையில் திமுக ஆட்சி என்பது இந்துக்களுக்கும் இந்து மதத்திற்கும் எதிரானது, அதனால்தான் இந்து அறநிலைத்துறையின் பெயரில் இந்துக் கோவில்களில் உள்ள தங்க நகைகளை உருக்குவோம் எனக் கூறி வருகின்றனர். இன்னும் பல்வேறு இடங்களில் கோவில் சொத்துக்கள் மீட்கப்படாமல் உள்ளன. அதை மீட்க முயற்சிகள் இல்லை, அதேபோல விநாயகர் சதுர்த்தியின் போது சிலைகளை வைக்க அனுமதி வழங்காததும் இந்து மத விரோத போக்கு இல்லாமல் வேறொன்றும் இல்லை என கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

திமுக எதிர்ப்பு என்பது அரசியல் எதிர்ப்பு மட்டும் அல்ல சித்தாந்த ரீதியான எதிர்பார்க்க பாஜக செய்து வருகிறது. தமிழகத்தைப் பொறுத்த வரையில் அதிமுகதான் எதிர்க்கட்சி என்றாலும் பாஜக- திமுகவுக்கு இடையேதான் கடுமையான எதிர்ப்பு நிலவி வருகிறது என்பதே நிதர்சனம்.

இந்நிலையில் அதை மெய்ப்பிக்கும் வகையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா பெரியாரின் சுயமரியாதை மற்றும் கொள்கை பாதையைப் பின்பற்றிய ஆனைமுத்து படத்திறப்பு விழாவில் இந்து மதத்தை தான் ஏன் எதிர்க்கிறேன் என்றும்,பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது . மேலும் கருப்பு சிவப்பு நீலம் ஒன்றாக இருக்க வேண்டும் அப்படி இருந்தால் மட்டுமே 2024 ல் பாஜக என்ற காவியை வீழ்த்த முடியும் என்று பேசியுள்ளார். தொடர்ந்து அவர் தனது பேச்சுக்கள் மூலம் பாஜக எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

சென்னை சேப்பாக்கத்தில் பெரியார் ஆனைமுத்து படத்திறப்பு மற்றும் வெளியீட்டு நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினரும் திமுக துணைப் பொதுச் செயலாளருமான ஆ ராசா பேசியதாவது :

ஆனைமுத்துவுக்கும் எனக்கும் உள்ள தொடர்பு நீண்ட நெடியது, டெல்லிக்கு வரும்போதெல்லாம் என் வீட்டிற்கு வந்து நீண்ட நேரம் பேசுவார். ஒரு தத்துவத்தை கூறி அந்த தத்துவம் நிறைவேறுவதை தன் கண்ணால் பார்த்த ஒரே தலைவர் பெரியார் அந்த பெரியாரே பேரறிஞர் என ஆனைமுத்துவை கூறினார். அதை விட அவருக்கு நாம் என்ன பெருமையை செய்ய முடியும். பூலோக ரீதியாக ஆனைமுத்துவும் நானும் ஒரே மாவட்டத்தை சேர்ந்தவர்கள். 1973 இல் நான் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிரு ந்தபோது, பெரியார் குடில் நடத்தினார் ஆனைமுத்து, அதில் நான் படித்தேன், அப்போது நான் விடுதிக்கு கிளம்பும்போதே என் அம்மா, இது முருகன் கோயில் விபூதி… காலையில் எழுந்ததும் இந்த விதிகளை வச்சுக்கோ, இருட்டில் போனால் இந்த விபூதி வச்சுக்கோ என்று தருவாங்க. நானும் வச்சிட்டு இருந்தேன். அப்போதுதான் பெரியாரின் கடைசி உரையை நான் கேட்டேன்.. அதற்கு பிறகு மதம் ஏன் ஒழிய வேண்டும் என்பது போன்ற சின்ன சின்ன புத்தகங்களைப் படித்தேன்.

அதன்பிறகுதான் அந்த விபூதிகளை எல்லாம் தூக்கிப் போட்டேன். தூக்கிப் போட்டதும் இல்லாமல் எங்க ஊரில் ஒரு பிள்ளையார் சிலை இருந்தது, அந்த சிலைக்கு கீழே ஒரு ஆனைவெடி வச்சுட்டேன்.. அது உடைந்து சிதறியது, பின் அது பெரிய பிரச்சனை ஆயிடுச்சு. அதெல்லாம் ஒரு காலம்.. என் வாழ்வில் நான் மாற்றியதற்கு காரணம் பெரியார் பேசிய அந்த கடைசி பேச்சு தான். தொடர்ந்து பேசிய அவர் நானே நினைத்தாலும் இந்துவாக இருந்து என்னால் வெளியேற முடியாது. ஏன் என்றால் இந்து அமைப்பு சட்டத்தில் யார் கிறிஸ்துவர்கள், யார் இஸ்லாமியன், யார் யூதன் இல்லையோ மற்ற அனைவரும் இந்து என்றுதான் சட்டம் உள்ளது. எனவே நானே நினைத்தாலும் வெளியேற முடியவில்லை அப்படி வெளியேறினால் அந்த நாள் வந்தால் அதுதான் ஆனைமுத்துவிற்கு மரியாதை செய்யும் நாளாக இருக்கும் என தெரிவித்த அவர் காவியை அழிக்க அனைத்து கருப்பு சிவப்பு நீலமும் ஒன்று சேர வேண்டும் என கூறினார்.

பிள்ளையார் சிலையினை உடைத்தேன்,விபூதியை தூக்கி எறிந்தேன் என ஆணவமாக பேசிய ஆ.ராசாவை மத மோதலை தூண்டும் வகையில் பேசியதால் அவரை கைது செய்யவேண்டும் என்ற குரல்கள் எழுந்துள்ளது.

Exit mobile version