அரசு நிலம் அபகரிப்பு…தி.மு.க ஒன்றியக்குழு துணைத் தலைவருக்கு நோட்டீஸ்..

dmk

dmk

திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து சட்டம் ஒழுங்கு சரியாக சற்று ஆட்டம் கண்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் திமுகவினரின் அராஜகம் என்பது எல்லை மீறி சென்று கொண்டிருக்கிறது. நிலம் அபகரிப்பு,ஆணையாளரிடம் கமிஷன் என அடுக்கி கொண்டே போலாம். தினம் ஒரு திமுகவினர் செய்யும் அராஜகம் தினம் செய்திகளில் வந்து கொண்டுள்ளது;

இந்த நிலையில் கல்பாக்கம் அடுத்த சதுரங்கப்பட்டினம், மெய்யூரைச் சேர்ந்தவர் பச்சையப்பன். தி.மு.க., பிரமுகர். திருக்கழுக்குன்றம் தி.மு.க., ஒன்றியக்குழு துணைத் தலைவராக உள்ளார். அவருக்கு சொந்தமான சில ஏக்கர் நிலம், திருக்கழுக்குன்றம் அடுத்த கீரப்பாக்கம் பகுதியில், செங்கல்பட்டு சாலை அருகில் உள்ளது.அந்நிலத்தை, வீட்டுமனை பிரிவாக மாற்றி விற்க, மற்றொரு தி.மு.க., பிரமுகரும், அதே ஒன்றியக் குழுவின் 11வது வார்டு தி.மு.க., கவுன்சிலருமான ஜெயபாலிடம், சில ஆண்டுகளுக்கு முன் ஒப்படைத்துள்ளார்.

இவர், வீட்டுமனை பிரிவாக மாற்றப்பட்டபோது, வளாகத்தின் முன்புற பகுதியான அரசு புன்செய் தரிசு நிலத்தில், சுற்றுச்சுவர் கட்டியும், பாதை அமைத்தும் ஆக்கிரமித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு, அப்பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்து, திருக்கழுக்குன்றம் தாசில்தாரிடம் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில், அங்கு தாசில்தார் ஆய்வு செய்தார். அரசு புன்செய் தரிசு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது இதில் உறுதியானது.

அதனால், ‘இப்பகுதியில் அத்துமீறி நுழைவோர் மீது, சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’ என, எச்சரித்து, அறிவிப்பு பலகை அமைக்கப்பட்டது. ஆனாலும், தாசில்தாரின் எச்சரிக்கையை பொருட்படுத்தாமல், பலகையை அப்புறப்படுத்தினர்.

அது மட்டுமின்றி, அருகில் உள்ள இருளர் குடியிருப்பு பகுதி குடிநீர் ஆழ்துளை கிணற்றையும் துார்த்து, நிலத்தடியில் செல்லும் குழாய்களை சேதப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இவ்விகாரம் தொடர்பாக, கிராம நிர்வாக அலுவலர், திருக்கழுக்குன்றம் போலீசில் ஏற்கனவே புகார் அளித்து, சி.எஸ்.ஆர்., பதிவாகியுள்ளது.

நிலத்தின் உரிமையாளரான பச்சையப்பனிடம், ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு பல முறை அறிவுறுத்தியும், அவர் அகற்றவில்லை.இந்நிலையில், நேற்று முன்தினம், ஆக்கிரமிப்பு பகுதியில் மண் நிரப்பி, மேலும் உயர்த்தி மேம்படுத்த, பொக்லைன் இயந்திரம் மூலம் பணிகள் துவக்கப்பட்டது. அதையறிந்த அப்பகுதிவாசிகள், பணிகளை தடுத்து நிறுத்தியதோடு, தாலுகா நிர்வாகத்தினரிடம் தெரிவித்தனர்.

இந்நிலையில் ஆக்கிரமிப்பை அகற்றும் படி, பச்சையப்பனுக்கு திருக்கழுக்குன்றம் தாசில்தார் ராஜேஸ்வரி, ‘நோட்டீஸ்’ அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது: புல எண்: 94பி – 1சி1 அரசு புன்செய் தரிசு நிலத்தில், 0.20.0 ஏர்ஸ் – 69 சென்ட் பகுதியை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள சுற்றுச்சுவர் மற்றும் பாதையை, ஆக்கிரமிப்பு சட்டம் 1905ன் படி, 15 நாட்களுக்குள் அகற்ற வேண்டும். அகற்ற தவறினால், போலீஸ் பாதுகாப்புடன் வருவாய்த் துறை அதிகாரிகள் முன்னிலையில் நேரடியாக அகற்றப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பு பகுதி சுற்றுச்சுவரிலும், இந்த நோட்டீஸ்’ ஒட்டப்பட்டுள்ளது.

Exit mobile version