இரண்டு பெண்கள் ஒரு சிசுவின் உயிரை பறித்த போலி முகநூல் கணக்கு! விளையாட்டினால் விதி இழந்த 3 உயிர்கள்!

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம் குழந்தை ஒன்று புதரிலிருந்து கண்டெடுக்கப்பட்டது. பச்சிளம் குழந்தை உயிருக்கு போராடிய நிலையில் காணப்பட்டது. தீவிர சிகிச்சை அளித்தும்குழந்தையின் உயிர் பிரிந்தது. இந்த சம்பவம் தொடர்பாக இது கொல்லம் மாவட்ட காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணைமேற்கொண்டுவந்தார்கள்.

மேலும் புதரில் வீசப்பட்ட குழந்தை பற்றி துப்பு துலங்கியது பச்சிளம் குழந்தை கல்லுவாதுக்கலைச் சேர்ந்த ரேஷ்மா என்பவரின் குழந்தை என்பது தெரிந்தது. இதனை தொடர்ந்து விசாரணையை தீவிரப்படுத்தினார்கள் காவல்துறையினர். இரக்கமற்ற பச்சிளம் குழந்தையை புதரில் வீசிய ரேஷ்மாவிடம் காவலர்கள் விசாரணை மேற்கொண்டர்கள். அப்போது பல திடுக்கிடும் தக்வல்கள் வெளிவந்தது

ரேஷ்மாவிற்கு அனந்து என்பவர் முகநூலில் பழக்கமானதாகவும், அவருடன் சென்று புதிய வாழ்க்கையை தொடர ரேஷ்மா பிறந்த குழந்தையைபுதரில் வீசி வீட்டு சென்றதும் தெரியவந்தது.ரேஷ்மாவின் கணவர் வெளிநாட்டில் உள்ளார். மேலும் விசாரணையில் ரேஷ்மா பழகிய அனந்தை அவர் நேரில் பார்த்தது இல்லை. முகத்தை கூட பார்க்காமலே காதல் வலையில் விழுந்துள்ளார் ரேஷ்மா .முகமறியா காதலுக்காக பெற்ற பிள்ளையை தூக்கி வீசிய கொடூரம் மனம் படைத்தவராக மாறியுள்ளார் ரேஷ்மா பின் அந்த அனந்து என்பதை யார் என தேட ஆரம்பித்தது காவல்துறை.

அப்போது தான் மிகப்பெரும் பேரதிர்ச்சி காத்திருந்தது ரேஷ்மா மற்றும் காவல்துறையினருக்கு அதாவது அனந்து என்ற நபர் உண்மையில் ஆண் இல்லை. ரேஷ்மாவை கிண்டல் செய்வதற்கும் பொழுதுபோக்கிற்கும் ரேஷ்மாவின் உறவுக்கார பெண்களான ஆர்யா மற்றும் க்ரீஷ்மா ஆகியோர்தான் இவ்வாறு செய்துள்ளனர்.இதையடுத்து இரு பெண்களுக்கும் காவலர்கள் நோட்டீஸ் அளித்தனர். இதைப் பார்த்து பயந்து போன இரு பெண்களும் ஆற்றில் குறித்து தற்கொலை செய்து கொண்டனர். பாதிக்கப்பட்ட ரேஷ்மா நீதிமன்ற காவலில் உள்ளார்.

Exit mobile version