குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான சர்ச்சைகள் கொதி நிலையிலேயே வைக்கப்பட்டு தற்போது கலவரத்தில் முடிவடைந்திருக்கிறது.
ஆனால், எதனால் இந்த சர்ச்சைகள் என்று தான் எனக்கு
சுத்தமாகப் புரியவில்லை.
.சட்டத்திற்கு புறம்பாக திருட்டுத்தனமாக குடிபெயர்ந்தவர்கள் அனைவரும் வெளிநாட்டினர் சட்டம் 1946 மற்றும் குடியுரிமைச் சட்டம் 1955-ன் கீழ் வெளியேற்றப் பட வேண்டியவர்கள்.வட கிழக்கு பிராந்தியங்களில் திருட்டுத்தனமாக குடியேறியவர்களை அடையாளம் காணும் நடைமுறை வேறு காரணத்திற்காக விமர்சிக்கப்பட்டது. ஆனால், பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷிலிருந்து வந்து குடியேறி உள்ள முஸ்லிம்களை வெளியேற்ற வேண்டும் என்ற சட்டம் 1946 மற்றும் 1955ம் வருடததிய சட்டமே.
குடியுரிமை திருத்த சட்டம் போய் விட்டாலும் கூட திருட்டுத்தனமாக உள்ளே நுழைந்த முஸ்லிம்கள் திருட்டுத்தனமாக நுழைந்த ஏனைய சீக்கியர்கள், பௌத்தர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் போலவே நாட்டைவிட்டு வெளியேற்றப்பட வேண்டும் என்பதுதான் குடியுரிமைச் சட்டத்தின் விதி.
தற்காலத்தில் அனைத்து நாடுகளிலும் ஒத்த கருத்துகளில் அடிப்படையிலான சட்ட விதிகளின் அடிப்படையிலேயே குடியுரிமை வழங்கப்பட்டு வருகின்றன குடியுரிமை என்பது பிறப்பு, வாரிசு,குடி உரிமைப் பேறு, புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்ட நிலப்பகுதிகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே வழங்கப்பட்டு வருகின்றன ஒரு நாட்டிற்குள் அனுமதி இல்லாமல் நுழைபவர்கள் சட்ட விரோத குடியேறிகளாகக் கருதப்பட்டு வெளியேற்றப் பட வேண்டியவர்கள்
வங்கதேசப் போரினால் வடகிழக்கு பகுதிகளில் ஏற்பட்ட மக்கள் தொகை பிழற்ச்சி பிரச்சினையால் அசாம் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு சட்டவிரோத குடியேற்ற( தீர்ப்பாயம் மூலம் அடையாளம் காணுதல்) சட்டம் நிறைவேற்றப்பட வழி ஏற்பட்டது ஆனால் சட்டவிரோத குடியேறிகளை அடையாளம் கண்டு வெளியேற்றுவது இச்சட்டத்தின் மூலம் இயலாததாகி விட்டது அசாம் ஒப்பந்தத்திற்கு எதிராக இச்சட்டம் அமைந்துள்ளதாக எதிர்த்தவர்களால்.
உச்ச நீதிமன்றம் சட்டவிரோத குடியேறிகளை அடையாளம் கண்டு வெளியேற்றும் பணியை முடிக்க அரசினை கண்டித்ததன் விளைவாக, தடுப்புக்காவல் புகார்களை தெரிவிக்க வேண்டியது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
குடியுரிமை திருத்த மசோதா 2016 மக்களவையில் 19 ஜூலை 2016 அன்று அறிமுகப்படுத்தப்பட்டு பாராளுமன்றத்தின் இரு அவைகளின் இணைக் குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அக்குழு, 4 ஜனவரி 2019 அன்று தனது பரிந்துரைகளை வழங்கியது.
2003 ல் நிர்ணயிக்கப்பட்ட விதிகளின்படி, நாடு முழுவதும் வீடு வீடாக கணக்கீடு செய்யப்பட்டு தேசிய இந்திய மக்களின் பதிவேட்டினை உருவாக்கிடவும் ஐயதிற்குரிய மக்களை கூடுதல் விசாரணைக்கு உட்படுத்தவும் வேண்டும். இவ்விதிகள் கடந்த 16 ஆண்டுகளாக இருந்தாலும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.
நியாயமான காரணங்களின் அடிப்படையில் அடையாளம் காணப்பட்ட ஒரு பிரிவினருக்கு சலுகைகளை வழங்கும் சட்டம், இன்னும் பல பிரிவுகளை உள்ளடக்கியதாக கொண்டு இருந்திருந்தால் எல்லோரும் பயன் பெற்று இருப்பார் என்ற காரணத்திற்காக எதிர்க்கப்படுவது பற்றி புரிந்து கொள்ளவே முடியவில்லை.
அனைவருக்குமான சம உரிமை என்பது எல்லா சட்டத்திற்கும் பொருந்த வேண்டும் என்பது அல்ல .
சம உரிமை என்பது அரசாங்கம் சில பிரிவினருக்கு என சட்டங்களை இயற்றுவதை தடுக்க முடியாது.ஒரு வரையறுக்கப்பட்ட பிரிவினரின் அனைத்து உறுப்பினர்களையும் சமமாகப் பாவிக்கும் சட்டத்தினை , அது பிற பிரிவினரையும் உள்ளடக்கியதாக இல்லை என்ற அடிப்படையில் அது சம உரிமைக்கு எதிராக உள்ளது என குற்றம் சாட்டபட்ட இயலாது.
ஒரு சட்டம் மற்ற பிற பிரிவினரையும் உள்ளடக்கியதாக இருத்தல் நலம் என்றும் அது குறித்து அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் கருதினாலும் அரசின் நடவடிக்கைகளில் தலையீடு செய்ய முடியாது என உச்ச நீதிமன்றம் பலமுறை நிலைப்பாடு எடுத்துள்ளது.
குடியுரிமை திருத்த சட்டத்தின் நோக்கம் என்பது ஆப்கானிஸ்தானம், வங்காளதேசம் பாகிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து புலம்பெயர்ந்த சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்குவதே. இந்த இஸ்லாமிய நாடுகளில் சிறுபான்மையினர் கொடுமைப்படுத்தப்பட்டனர் என்பதற்கு ஏதாவது நிரூபணம் தேவையா?
இந்த மூன்று அண்டை நாடுகளில் கொடுமைப்படுத்தப்பட்ட சிறுபான்மையினரை காக்கவேண்டும் என பாராளுமன்றம் முடிவெடுத்ததை எவ்வாறு குறை காண முடியும்?
ஒரு சட்டம் மதரீதியிலான பிரிவினையை காண்கிறது என்பதால் மட்டுமே அது அரசியல் நிர்ணயச் சட்டத்திற்கு எதிரானது அல்ல.அதே அரசியல் சட்டத்தில் தான் சிறுபான்மை மதத்தினருக்கு சில உரிமைகளை வழங்கியுள்ளது என்பதை நாம் மறந்து விடக்கூடாது.
குடியுரிமை திருத்தச் சட்டம் பாகிஸ்தான், வங்காளதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து வரும் எல்லா சமயத்தவரையும் இந்தியாவிற்கு புலம்பெயர அனுமதிக்கும் வகையில் அமைக்கப்பட்டு இருந்தால், அதற்கு பதில் நாம் நம் எல்லைகளை அனைவருக்கும் திறந்து விட்டு விடலாம்.
இச்சட்டம், எல்லா நாட்டிலிருந்தும் வரும் கொடுமைகளுக்கு ஆளான எல்லா சமூகத்தினரையும் இந்தியாவிற்குள் வர விடாமல் தடுத்து பாகுபாடு காண்கிறது என்பது மேலும் ஒரு பலவீனமான வாதம். இந்தியாவின் பெரிய வக்கீல்கள் எவரும் இத்தகைய வாதத்தை முன்வைக்க இதுவரை முன்வரவில்லை.
மேலும்,முஸ்லிம்களை இந்தியாவிலிருந்து வெளியே துரத்த அரசாங்கம் உத்தேசித்து இருக்கிறது என்பது ஓங்கி ஒலிக்கும் வாதமாக இருக்கிறது ஆனால் இது போன்ற உத்தேசங்களுக்கு ஆதாரமாக எந்தவித அறிக்கையை சட்டமோ விதியோ அல்லது வரைவோ இதுவரை வெளியிடப்படவில்லை.
பிரதமமந்திரியும் இதனை மறுத்துள்ளார். மற்றவர்களைவிட முஸ்லிம்கள் மட்டுமே தங்களது குடியுரிமையை நிலைநாட்ட அதிகப்படியான ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்ற நடைமுறை வகுக்கப்பட்டால் மட்டுமே அது சட்ட விரோதமாகும்.
வங்கதேசப் போரினால் இந்தியாவின் வடகிழக்கு பகுதிகளில் மக்கள்தொகையில் ஏற்படுத்தப்பட்ட பிழற்சியை சரி செய்ய எடுக்கப்படும் சிறப்பு நடவடிக்கைகள் என்பது வேறு ஆனால் இதே நடைமுறை இந்தியாவின் பிற பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என நம்புவது சட்ட விதிகளைப் பற்றிய அறிவீனத்தை எடுத்துக் காட்டுகிறது.
சாதிகளுக்கும் மதங்களுக்கும் இடையேயான முனைவாக்கம் காலங்காலமாக உள்ளது. அதேபோல் காலங்காலமாக அதிகாரத்தை அனுபவித்தவர்களுக்கும் அவர்களை அதிகாரத்தில் இருந்து அப்புறப்படுத்தியவர்களுக்கும் இடையேயான முனைவாக்கம் வளர்ந்து வருவதை நான் உணர்கிறேன்.
இவைகளுடன் கூட, தோன்றிய நாடுகளிலேயே உதாசீனப்படுத்தப்பட்டு கிடக்கும் சித்தாந்தங்களை இந்நாட்டில் கட்டிப் பிடித்துக் கொண்டிருக்கும் “அறிவுஜீவிகள்” பொது வாழ்க்கையிலும் பொது விவாதங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்கள் எல்லாம் சேர்ந்து கொண்டு ஆர்ப்பாட்டங்களுக்கும் வி(தண்டா)வாதங்களுக்கும் களத்தை உருவாக்கி வருகின்றனர்.