போலி பயனாளிகள்!!
கண்டுகொள்ளுமா மத்திய மாநில அரசுகள்???
பிரதம மந்திரியின் விவசாயிகள் ஊக்குவிப்பு தொகை திட்டம்! (PM KISAN SAMMAN NITHI)-ல்
தமிழகம் முழுவதும் விவசாயிகள் அல்லாதோர் மற்றும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மற்ற விவசாயிகள் என்று
போலி விவசாயிகள்
மற்றும்
போலி பயனாளிகளை
முறைகேடாக மேற்கண்ட திட்டத்தில் இணைத்து மாபெரும் முறைகேடு நடைபெற்று வருகிறது.
ஒரு ஊரைச் சேர்ந்த போலி பயனாளியை வேறு வட்ட பயனாளியாகவும், வேறு மாவட்ட பயனாளியாகவும் முறைகேடாக இணைத்து பொதுமக்களிடம் பணவசூல்வேட்டை நடைபெற்று வருகிறது!!
மாநில அளவிலான PM KISAN LOG IN ID, மற்றும் PASSWORD வேளாண்மை துறை அதிகாரிகள் மூலமாக கசிய விட்டதே இதற்கு காரணம் ஆகும். வேளாண்மை துறையில் கணினி வழி வேலை செய்யும் நபர்களே இதற்கு காரணம் ஆவார்கள்.
இவர்களை தமிழக அரசு உடனடியாக கண்டறிந்து பணி நீக்கம் செய்ய வேண்டும். மேலும் போலி பயனாளிகளை நீக்கம் செய்து மாபெரும் நிதிமுறைகேட்டை அரசு தடுக்க வேண்டும்!!
இந்த முறைகேட்டை பாஜக சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம்!!
இந்த முறைகேடுகள் மீது மத்திய மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக சார்பாக கேட்டுக்கொள்கிறோம்!!
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















