இஸ்லாமாபாத்தில் முதல் இந்து கோவில் ரூ.10 கோடியில் கட்டப்படுகிறது! ஸ்ரீ கிருஷ்ணா மந்திர்

பாகிஸ்தான் தலைநகரான இஸ்லாமாபாத்தில் இந்த முதல் இந்து கோவில் கட்டப்படுகின்றது இஸ்லாமாபாத்தில் உள்ள எச்-9 என்ற பகுதியில் சுமார் 20 ஆயிரம் சதுர அடியில் கிருஷ்ணர் கோயில் கட்டப்படுகிறது. பாகிஸ்தான் இஸ்லாமாபாத்தில் அமையும் முதல் இந்து கோயில் என்ற பெருமையை இது பெறுகிறது.

இந்த கோவிலுக்கான கட்டுமானப் பணி தொடங்க அடிக்கல் நட்டு பூமி பூஜை நடத்தினார். அந்நாட்டின் மனித உரிமைகளுக்கான நாடாளுமன்ற செயலர் லால் சந்த் மால்ஹி இஸ்லாமாபாத்தில் உள்ள இந்து அமைப்பினர் இந்த கோயிலுக்கு ஸ்ரீ கிருஷ்ணா மந்திர் என பெயர் சூட்டியுள்ளனர்.

அந்த விழாவில் நாடாளுமன்ற செயலர் லால் சந்த் மால்ஹி பேசுகையில் ‘‘கடந்த 1947-ம் ஆண்டுக்கு முன் இஸ்லாமாபாத்திலும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் ஏராளமான இந்து கோயில்கள் இருந்தன. கோயிலுக்குச் சென்று வழிபட ஆளில்லாமல் போய் காலப் போக்கில் அவை கைவிடப்பட்டன. கடந்த 20 ஆ ண்டுகளில் இஸ்லாமாபாத்தில் இந்துக்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருவதால் அவர்கள் வழிபட கோயில் தேவை என்ற நிலை ஏற்பட்டுள்ளது’’ என்று தெரிவித்துள்ளார். இத்தகவலை ‘தி டான்’ பத்திரிகை வெளியிட்டுள்ளது.

கிருஷ்ணர் கோயில் கட்ட ரூ.10 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அந்த தொகையை அரசே ஏற்கும்’’ என்று தெரிவித்தார். மத விவகாரத் துறை அமைச்சர் பீர் நூருகூறினார்.

Exit mobile version