இலங்கையில் தலைவிரித்தாடும் உணவு பஞ்சம்! அங்கு சர்க்கரை விலை கிலோ இவ்வளவா?

நமது அண்டை நாடான இலங்கையில் கடும் உணவு பஞ்சம் ஏற்பட்டுள்ளது. அத்தியாவசப் பொருட்‌களான அரிசி ஒரு கிலோ 200 ரூபாய்க்கும் சர்க்கரை கிலோ 250 ருபாய்க்கும் பருப்பு வகைகள் கிலோ 300 ரூபாய்க்கு மேல் விற்கப்படுகிறது.

கரொனா பாதிப்பால் அங்கு பொருளாதாரம் கடும் வீழ்ச்சி அடைந்து உள்ளது. உணவு பொருட்களை இறக்குமதி செய்ய அந்நாட்டில் அந்நிய செலவாணி கையிருப்பு குறைந்து விட்டதால் இறக்குமதி செய்ய முடியவில்லை.

இதனால் உணவு பொருட்களை அங்குள்ள வியாபாரிகள் பதுக்க ஆரம்பித்து விட்டார்கள். இதை தடுக்க முடியாமல் அங்குள்ள அரசாங்கம் தடுமாறுகிறது. இதனால் அங்கு பொருளாதார அவசர நிலை பிறப்பிக்கபட்டுள்ளது.

இப்பொழுது அங்கு அத்தியாயம் பொருட்களை கண்காணிக்க ராணுவத்தின் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். இரண்டு கோடி மக்கள் தொகை கொண்ட இலங்கையே கரொனா நெருக்கடியை சமாளிக்க முடியாமல் திணறுகிறது.

அதே சமயம் 130 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் எந்த வித பொருளாதார நெருக்கடியும் உணவு பொருட்களுக்கு தட்டுபாடே கிடையாது பக்கத்து நாட்டில் இலங்கைக்கு அரிசி கடத்தும் சூழ்நிலை ஏற்பட்டால் இங்குள்ள மக்களே வரவேற்பார்கள். காரணம் அந்தளவுக்கு இங்கு உணவு பொருட்கள் அபரிதமான விளைந்து உள்ளது.

நாட்டின் அந்நியச் செலவாணி கையிருப்பு வெகுவாக உயர்ந்து உள்ளது. இதற்கெல்லாம் காரணம் பிரதமர் மோடி அவர்களின் சிறந்த நிர்வாகமே காரணம்.

Exit mobile version