மோடி அரசின் துரித நடவடிக்கை! வரலாற்றில் முதல் முறை ரயில்வே வருவாய் 2.40 லட்சம் கோடி !

2014 ஆம் ஆண்டு பிரதமராக மோடி அவர்கள் பதவியேற்றத்திலிருந்து அரசு துறைகளில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் காரணமாக அரசு பொது நிறுவனங்கள் லாபத்தில் செயல்படக்கூடியதாக மாறி வருகிறது. அரசு டெண்டர் முதல் அனைத்தும் ஆன்லைன் வழியாக கோருவதால் லஞ்சம் தவிர்க்கப்பட்டுள்ளது. மேலும் பொதுத்துறை நிறுவனங்களை மேம்படுத்துவத்தில் முனைப்பு காட்டி வருகிறது மோடி அரசு.

இந்தியாவின் இன்றியமையாத போக்குவரத்து பொது துறை என்றால் அது ரயில்வே தான். இந்த ரயில்வே துறையில் பல்வேறு மாற்றங்கள் ரயில் பாதைகள் மேம்படுத்தி ரயில்களின் வேகத்தை கூட்டி வருகிறது. மேலும் வந்தே பாரத் ரயில் என புதிய ரயில்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது இந்தியன் ரயில்வே இதன் காரணமாக இந்திய ரயில்வே வருவாய் வரலாறு காணாத அளவுக்கு 2.40 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

கடந்த 2022-23ஆம் நிதியாண்டுக்கான ரயில்வே வருவாய் விவரங்களை ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 2022-23ஆம் நிதியாண்டில் ரயில்வே வருவாய் 2.40 லட்சம் கோடி ரூபாயாக வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது.

முந்தைய 2021-22ஆம் நிதியாண்டை காட்டிலும் ரயில்வே வருவாய் 49,000 கோடி ரூபாய் உயர்ந்துள்ளது. இது 25% வளர்ச்சி ஆகும். அதிலும் சரக்கு ரயில்கள் வாயிலான வருவாய் 15% உயர்ந்து 1.62 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.பயணிகள் ரயில்கள் வாயிலான வருவாய் 61% அதிகரித்து 63,300 கோடி ரூபாயாக வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. மேலும், மூன்று ஆண்டுகளுக்கு பிறகு இந்திய ரயில்வே தற்போது முழுமையாக ஓய்வூதிய செலவுகளை சந்தித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.

வருவாயை பொறுத்தவரை 2022-23ஆம் நிதியாண்டில் பயணிகள் ரயில்கள் வாயிலாக 63,300 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. இது 2021-22ஆம் நிதியாண்டில் கிடைத்த 39,214 கோடி ரூபாய் வருவாயை விட 61% அதிகம் ஆகும்.

இதர வருவாய் வாயிலாக 5951 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. இது முந்தைய நிதியாண்டில் கிடைத்த 4899 கோடி ரூபாயை விட 21% அதிகமாகும். 2022-23ஆம் நிதியாண்டில் ரயில்வே மொத்தம் 2,37,375 கோடி ரூபாயை செலவு செய்துள்ளது. அதற்கு முன் 2021-22ஆம் ஆண்டில் ரயில்வே மொத்தம் 2,06,391 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது.

6565 கிலோமீட்டர் தொலைவுக்கான ரயில் வழித்தடங்களை மின்மயமாக்கம் செய்வதற்காக 6657 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பு பணிகளுக்காக 11,800 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது.

Exit mobile version