விநாயகர் சதுர்த்தியும் இந்தியாவின் விடுதலையும் ! விநாயகர் சிலை வழிபாட்டை முன்னெடுத்தவர் ’பாலகங்காதர திலகர்

மத்திய ஆசியாவிலிருந்து படையெடுத்து, இந்திய மண்ணை அபகரித்துக் கொண்ட துருக்கியர்கள், ஆப்கானிஸ்தானியர்கள்; கிபி 1500-க்கு பிறகு ஐரோப்பியாவில் இருந்து வந்து இந்தியாவை ஆக்கிரமித்த போர்ச்சுகீசியர்கள், டச்சுக்காரர்கள் மற்றும் ஆங்கிலேயர்கள்;

இந்தியாவை துண்டு துண்டாக ஆட்சி செய்துகொண்டிருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட குறுநில மன்னர்கள் எனப் பல ஆதிக்க-அதிகார சக்திகள் ஒன்று சேர்ந்து ஏழை, எளிய இந்திய மக்கள் மீது சவாரி செய்து வந்தனர்.

90 சதவீதத்திற்கு மேற்பட்ட கிராம மக்கள் அறியாமையிலும், வறுமையிலும் அல்லல்பட்டு, தங்கள் வாழ்க்கையை வெறுமனே கழித்துக் கொண்டிருந்தார்கள்.

தாங்கள் அடக்கப்படுகிறோம்; சுரண்டப்படுகிறோம்; ஒடுக்கப்படுகிறோம் என்பது தெரிந்திருந்தாலும் எதிர்த்துப் போராடுவதற்கோ, ஒன்றுபடுவதற்கோ போதிய மனவலிமை இல்லாமல் இருந்தார்கள்.

1857-ல் நடைபெற்ற சிப்பாய் கலகத்திற்குப் பிறகு, இந்திய மக்கள் மீது, குறிப்பாக இந்துக்கள் மீதான ஆங்கிலேயரின் பிடி மேலும் இறுகியது.

மத ரீதியான காரணங்களைத் தவிர, 20 பேருக்கு மேல் கூட்டம் கூடவோ, பேசவோ தடை விதிக்கப்பட்டு இருந்தது. எனினும், மதரீதியாக நிறுவனப்படுத்தப்பட்டு விழிப்புடன் ஒன்றுபட்டுப் போராடியதாலும்; ஆட்சியிலிருந்த

இஸ்லாமிய மன்னர்களின் பின்புலத்தாலும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை தோறும் ’தொழுகை’ நடத்துவதற்கான உரிமையை ’இஸ்லாமியர்கள்’ மீட்டுக் கொண்டார்கள்.

ஆனால், இந்த மண்ணின் பூர்வீக குடிமக்களான இந்துக்களுக்கு நிறுவனப்படுத்தப்பட்ட மதமோ, அமைப்போ, வலுவான அரசியல் பின்புலமோ இல்லாததால் அவர்களால் ஒன்றுபடவும் முடியவில்லை;

போராடவும் முடியவில்லை; சாதாரண வழிபாட்டு உரிமைகளைக் கூட நிலை நிறுத்திக் கொள்ளவும் முடியாமல் நிர்க்கதியாய் நின்றார்கள்.

நாளுக்கு நாள் இந்துக்கள் மீதான கட்டுப்பாடுகள் அதிகரித்தன; இந்துக்களின் பெரும்பாலான மத சம்பிரதாய நடவடிக்கைகள் தடை செய்யப்பட்டன. இந்தியாவில் பல பகுதிகளில் கட்டாய மதமாற்றங்கள் நடந்தன.

மதம் மாறியவர்களும் ’உண்மையாக விசுவாசத்துடன் இல்லை’ என முத்திரை குத்தப்பட்டு கோவா மாநிலத்தில் ’Goa Inquisition’ என்ற பெயரில் ஆயிரக்கணக்கான மதமாறிய இந்துக்கள் ஈவிரக்கமில்லாமல் கொல்லப்பட்டனர்.

அதனால் நாடெங்கும் இந்தியர்கள் மத்தியில் அச்சமும், பீதியும் பற்றிக் கொண்டது. அரசியல் ரீதியாகவும்; மத ரீதியாகவும் ஒன்று கூடுவதற்குக் கூட வழியில்லாமல் இருந்தது.

எனவே, 1893-ல் புனே மற்றும் பம்பாய் பிராந்தியங்களில் ”Swaraj is my birth right and I shall have it – சுதந்திரம் எனது பிறப்புரிமை அதை அடைந்தே தீருவேன்” என முழங்கிய சுதந்திரப் போராட்ட தளகர்த்தர்களில் ஒருவரான ’பாலகங்காதர திலகர்’ அவர்கள் தேசப்பற்றோடு இந்தியாவின் அனைத்து கிராமங்களில் சந்து பொந்துகளிலெல்லாம் விநாயகர் சிலை வழிபாட்டையும், விநாயகர் சதுர்த்தியையும் ஒரு இயக்கமாகவே முன்னெடுத்தார்.

அதனால் வீடுகளில் முடங்கிக் கிடந்த மக்கள் வீதிக்கு வந்தனர். அன்று ஆங்கிலேயரை எதிர்த்து ஒன்று கூடுவதற்கும், சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுப்பதற்கும், தங்களுடைய வழிபாட்டு உரிமைகளை மீட்டுக் கொள்வதற்கும் உண்டான ஒரே மார்க்கமாக இருந்தது விநாயகர் வழிபாடு மட்டுமே.

எனவே, திலகர் அவர்களால் முன்னெடுக்கப்பட்ட விநாயகர் சதுர்த்தி விழாவைச் சங்கம், கட்சி, அணி என யாரும் குறுக்கிப் பார்க்கக் கூடாது. ஆங்கிலேயர்களின் இந்துக்கள்-இந்தியர்களின் மீதான ஒடுக்குமுறைகளுக்கும், அடக்குமுறைகளுக்கும் எதிராக மத ரீதியாக முன்னெடுக்கப்பட்ட சுதந்திரப் போராட்டமாகவே பார்க்க வேண்டும்.

ஆகையால், இவ்வளவு சிறப்புகள் மிக்க விநாயகர் சதுர்த்தி விழாவை கரோனா காரணம் காட்டி தடை செய்வது என்பது ஏற்புடையதல்ல. விநாயகர் சிலைகளை வீட்டில் வைத்து வழிபட யாருடைய அனுமதியும் தேவையில்லை. பொது இடத்தில் வைத்து வழிபடவும், நீர்நிலைகளில் கரைத்திடவுமே அரசின் அனுமதி வேண்டும்.
விநாயகர் சதுர்த்தி!!bஇந்திய சுதந்திரப் போராட்டத்திற்கே வித்திட்ட விழா!nசொத்தை காரணங்களை காட்டி தடை செய்யக் கூடாது!
டாக்டர் க. கிருஷ்ணசாமி MD,நிறுவனர்& தலைவர்,nபுதிய தமிழகம் கட்சி.

Exit mobile version