கொரோனாவை விரட்ட கண்ட வரச்சொல்லுங்க!ஆஸ்திரேலியாவுக்கு யோகியை கையோடு கூட்டி வாருங்கள்! ஆஸ்திரேலிய MP க்ரெய்க் கெல்லி!

உலகம் முழுவதும் கொரானாவின் தாக்கம் குறைந்தபாடில்லை . அனைத்து நாடுகளும் மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் முனைப்பு கட்டிவருகின்றது. இந்தியாவை பொறுத்தவரையில் 37 கோடி மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியவன் மிகப்பெரிய மாநிலம் உதிர்ப்பிரேதேசம் அங்கே நீதிமன்றம் அறிவுறுத்தியும் முழு ஊரடங்கை அமுல்படுத்தாமல் வெற்றிகரமாக கொரோனா தொற்றினை குறைத்தனர்.இதன் காரணமாக யோகியை பாராட்டியது உலக சுகாதார நிறுவனம். இந்தியவிற்கு மட்டுமல்லு உலகிற்கே முன்னுதாரணமாக திகழ்கிறது யோகி அரசு.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் கிராமப்புறங்கள் வரை வீடு வீடாக கொரோனா பரிசோதனை செய்து கொரோனா ஒழிப்பில் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளார் முதல்வர் யோகி ஆதித்யநாத். இதனை உலக சுகாதார நிறுவனம் வெகுவாக பாராட்டி உள்ளது வீடுவீடாக சென்று அறிகுறியுள்ளவர்களை அடையாளம் கண்டு தனிமைப் படுத்தியதுதான். அவர்கள் தொற்றினை குறைக்க வழி செய்தது.

இந்த நிலையில் “உத்தரபிரதேச முதல்வர் யோகியை அழைத்து ஆஸ்திரேலியாவின் கோவிட் நிலையை சரி செய்ய சொன்னாலென்ன?” என்று கேட்டிருக்கிறார் ஆஸ்திரேலிய பாராளுமன்ற உறுப்பினர் க்ரெய்க் கெல்லி.
காரணம்: 2.5 கோடி மக்கள் தொகையை கொண்ட ஆஸ்திரேலியா கோவிட் நிலையை கையாள முடியாமல் திணறுகிறது. 23 கோடிக்கு மேல் மக்கள் தொகை கொண்ட உத்தரபிரதேசம் கோவிட் நிலையை திறம்பட கையாண்டு அடக்கியிருக்கிறது. அதற்கு முக்கிய காரணம் ஐவர்மெக்டின் என்று குறிப்பிட்டிருக்கிறார் கிரெய்க் கெல்லி தன் ட்வீட்டில்.

மேலும் இந்தியாவின் தடுப்பு மருந்துகளுக்கு மட்டுமல்ல… அந்த தடுப்பு மருந்து விநியோகத்தை நிர்வகிக்கும் முறைக்கும் (கோ-வின் CoWIN தளம்) உலக நாடுகள் பல ஆர்வம் காட்டிய காரணத்தால், அந்த CoWIN தளத்தை விருப்பமுள்ள நாடுகளுக்கு இலவசமாக கொடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது!

வெள்ளைக்காரர் ஓர் இந்தியரை தன் நாட்டு நிலையை கட்டுப்படுத்த அழைத்தாலென்ன என்று கேட்பது இதுவே முதல் முறை என்று நினைவு. ஆனால், வெள்ளைக்காரர்களை கூப்பிட்டு நம் நாட்டு நிலையை கையாள கேட்பது தான் வழக்கம்.தற்போது அது தலைகீழாக மாற்றியது மத்திய மோடி அரசு. உலகிற்கு வழிகாட்டும் நாடாக மாறிவருகிறது இந்தியா. இதை ஊடகங்கள் சொல்ல தயங்குவது ஏனோ என்ற கேள்வி மக்களிடம் உருவாகிறது.

இந்த நிலையில் இந்தியாவை எப்படி மட்டம் தட்டலாம் என நினைத்து செயலாற்றுபவர்கள் தான் சமூக ஆர்வலர்கள் மற்றும் ஊடகங்கள். இதற்கு எடுத்துக்காட்டாக 49 லட்சம் மக்கள் தொகை கொண்ட நியூசீலாந்தின் பிரதமர் ஜசிந்தாவை அழைத்து 130 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவை ‘சரிசெய்ய’ அழைத்திருந்தார் சுமந்த் ராமன். என்ன இருந்தாலுஅந்த வெள்ளைக்கார ஜசிந்தா இன்னும் தன் நாட்டு மக்களுக்கு தடுப்பு மருந்து ஏற்பாடு செய்யாததால் கடுப்பில் இருக்கிறார்கள் மக்கள் என்பது வேறு விஷயம். 49 லட்சம் பேரில் கிட்டத்தட்ட 3 சதவீதம் (1.5 லட்சம்) பேருக்கு மட்டுமே தடுப்பு மருந்து செலுத்தியிருந்தது. இந்தியா இதுவரை 37 கோடிப் பேருக்கு மேல் தடுப்பு மருந்து தந்துள்ளது.

Exit mobile version