இறைவனுக்கு பிடித்த அபிஷேகம்..

எல்லோரிடமும் தூய்மையான
எண்ணத்துடன் பழகுவேன் என்ற
பால் அபிஷேகமும்..

யாருடைய மனதையும் புண்படுத்தமாட்டேன் குளிரவைப்பேன் என்று
இளநீர் அபிஷேகமும்..

எல்லோரிடமும் இனிமையாக இருப்பேன் என்று தேன் அபிஷேகமும்..

எப்பொழுதும் நற்குணங்களையே அனைவருக்கும் பரப்புவேன் என்று
பன்னீர் அபிஷேகமும்..

இந்த உடல் நிலையற்றது என்று எண்ணி பெருந்தன்மையுடன் இருப்பேன் என்று
திருநீறு அபிஷேகமும்..

எப்பொழுதும் மங்களகரமான வார்த்தைகளையே பேசுவேன் என்று
மஞ்சள் அபிஷேகமும்..

வாழ்க்கை முழுவதும் இறைவா உன் புகழ் பாடுவேன் என்று சந்தன அபிஷேகமும்..

சென்ற இடமெல்லாம் உன் சேவை செய்வேன் என்ற ஜவ்வாது அபிஷேகமும்..

அனைவரிடமும் புனிதமாக இணைந்து சென்று இந்த பிறவி பயணத்தை முடிப்பேன் என்று
நீர் அபிஷேகமும் செய்யுங்கள்..

ஓம்நமோஸ்ரீ

FacebookTwitterWhatsAppMessengerTelegramWeChatLineShare
Exit mobile version