கோவில் நிலங்களில் அரசு அலுவலங்கள் அறநிலையத்துறைக்கு எதிராக களமிறங்கிய இந்துக்கள்! அதிர்ச்சியில் மாவட்ட நிர்வாகம் !

திருப்பூர் ,ஆண்டிபாளையத்தில் ஸ்ரீ மாரியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது…இந்தக்கோயில் சுமார் 200 வருடங்கள் பழமையானது.இந்தக் கோயிலுக்குச் சொந்தமாக சுமார் 12 ஏக்கர் ( 11.6 ஏக்கர் ) நிலம் உள்ளது .இந்த நிலம் 12 ஏக்கரில் முன்பு அரசால் கையகப்படுத்தப்பட்டது , இடையில் செல்லும் சாலைகளுக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது போக எஞ்சியிருப்பது சுமார் ஒன்பது ஏக்கர் மட்டுமே.இந்த ஒன்பது ஏக்கர் நிலத்தையும் அறநிலையத்துறை வேறு ஒரு அரசுத் துறைக்கு விற்றுவிட்டதாக அந்த கிராம மக்களுக்கு தகவல் கிடைத்தது இதுதொடர்பாக அவர்கள் பல முறை அறநிலையத்துறையிடம் விவரம் கேட்டும் சரியான பதில் அளிக்கப்படவில்லை கடும் முயற்சிகளுக்குப் பிறகு அந்த இடம் காவல்துறைக்கு அறநிலையத் துறையால் விற்கப்பட்டு விட்டதாக தகவல் கிடைத்தது.இதையடுத்து வீட்டுக்கு ஆயிரம் ரூபாய் வரிவிதித்து , அந்த இடத்தைச்சுற்றி கிராம மக்களே கம்பி வேலி அமைத்து , இது கோயிலுக்குச்சொந்தமான இடம் என்ற அறிவிப்புப்பலகையும் வைத்தனர்


இந்நிலையில் சுமார் 10 தினங்களுக்கு முன்பாக காவல் துறை சார்பாக திடீரென அந்த இடம் சுத்தம் செய்யப்பட்டு , பொதுமக்கள் வைத்திருந்த அறிவிப்புப்பலகையும் அகற்றப்பட்டது…அதையடுத்து கமிஷனர் தலைமையில் அந்த வளாகத்தை சுற்றி மரங்கள் நடப்பட்டன.போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது அங்கு காவலர் குடியிருப்பு கட்டப்பட உள்ளது. என்ற செய்தி வெளிவந்துள்ளது.மிகவும் பிரபலமான அந்தக் கோயில் பொங்கல் விழாவுக்கு வருடந்தோறும் சுமார் லட்சம் பக்தர்கள் கூடுவார்கள்.அத்தனைபேரும் பொங்கல் வைத்து வழிபடவும் இதர வழிபாட்டு நிகழ்ச்சிகளை நடத்தவும் எஞ்சி இருக்கும் அந்த 9 ஏக்கர் நிலத்தில் தான்.கோயில் நிலத்தை மீட்கு முயற்சியில் இன்று காலை அப்பகுதி மக்கள் திருப்பூர் மங்கலம் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர் மறியலில் ஈடுபட்ட பிறகு ஓடி வந்த அதிகாரிகள் மக்களை மறியலை கைவிட வற்புறுத்தியுள்ளனர். அப்போது அங்கு வந்த அறநிலையத்துறை அதிகாரி இந்த இடம் காவல்துறைக்கு ரூபாய் 5.5 கோடிக்கு விற்கப்பட்டு விட்டதாகவும் , 3 கோடி ரூபாய் அறநிலையத்துறைக்கு வரவு வைக்கப்பட்டதாகவும் இன்னும் இரண்டு கோடி ரூபாய் வர வேண்டி இருக்கிறது என்றும் தகவல் சொல்லி உள்ளார்.


இது என்ன நியாயம் ? வேலியே பயிரை மேய்ந்தால் யார் என்ன செய்ய ,? அறநிலையத் துறை என்பது கோவில்களை பராமரிக்க ஏற்படுத்தப்பட்ட அமைப்பா அல்லது கோயில் நிலங்களை விற்க ஏற்படுத்தப்பட்ட அமைப்பா ? இவர்களுக்கு யார் இந்த அதிகாரத்தைத் தந்தது ? கோயில் நிலங்களின் பொறுப்பாளராக அந்ததந்தக் கோயிலின் மூர்த்தி உள்ள நிலையில் கோயில் நிலத்தை விற்க அறநிலையத்துறைக்கு ஏது அதிகாரம் ?

திருப்பூரில் தொடர்ந்து கோவில் நிலங்கள் சூறையாடப்பட்டு வருகின்றன. திருப்பூரில் உள்ள அரசு அலுவலகங்கள் கோர்ட்டில் பெரும்பாலும் கோயில் நிலைகளில் அமைந்தவை தான்.திருப்பூர் கலெக்டர் அலுவலகம் ,எஸ்பி அலுவலகம் , ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் இவை அனைத்துமே திருப்பூர் பெருமாள் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் தான் அமைந்துள்ளன.தற்போது நல்லூரில் அமைந்துள்ள கிளைச்சிறை வளாகமும் இன்னும் பல அரசு அலுவலகங்களும் தொடர்ந்து கோவில் நிலங்களிலேயே கட்டப்பட்டு வருகின்றது.

இந்த கோயில் நிலங்களை எல்லாம் எடுத்துக் கொள்வதற்கு என்ன கணக்கு? இத்தனை நிலங்களை எடுத்தாலும் எந்தக் கோவிலுக்கும் பணம் வந்து சேர்வதும் இல்லை எல்லா கோயில் செலவுகளுக்கும் , திருப்பணிகளுக்கும் அ.நி.துறை மக்களிடம் நன்கொடை வேறு வாங்குகிறது ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பிலும் , அரசால் சூறையாடப்பட்டும் வரும் நிலையில் எஞ்சியுள்ள கோயில் பூமிகளையும் அரசே திட்டமிட்டு அபகரித்தால் மக்கள் யாரிடம் போய்ச் சொல்லி அழுவது .?

இந்த விவகாரம் தொடர்பாக நாளை அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெறுவதாக தாசில்தார் அறிவித்துள்ளார் கோயில் நிலத்தை மீட்கும் வரை கிராம மக்கள் தொடர்ந்து போராட உள்ளனர்.

Exit mobile version