உதயநிதியை பிரித்து மேய்ந்த ஹெச்.ராஜா.. 50 நாட்களுக்குள் அரை டஜன் அமைச்சர்கள் சிறை செல்வார்கள்

HRAJA

HRAJA

தமிழக பா.ஜ.க மூத்த தலைவர் ஹெச்.ராஜா ஆளுநர் ஆகப்போகிறார் என்ற வந்ததிகளுக்கு இடையே மீண்டும் களத்தில் இறங்கியுள்ளார். சனாதன பிரச்சனைக்கு பிறகு தமிழக பா.ஜ.க மூத்த தலைவர் ஹெச்.ராஜா அமைச்சர் உதயநிதி ஸ்டாலினையும் திமுகவையும் இறங்கி வச்சு செய்து ள்ளார். உதயநிதி ஸ்டாலினை உளறல் மகா மன்னன் என பட்டம் சூட்டியுள்ளார்.

செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, தமிழக அரசியலில் பாஜக மட்டுமே இன்று வளர்கின்ற சக்தியாக உள்ளது. மேலும் பல்வேறு கருத்துக்கணிப்புகளில் பல இடங்களில் பாஜக இரண்டாம் இடத்தில் வரும் என கூறியுள்ளார்கள்.

தமிழகத்தில் திமுகவுக்கு தற்போது இறங்குமுகம்தான் உள்ளது. தமிழகத்தில் வளரும் ஒரே கட்சியாக இருப்பது பா.ஜ.க.தான். பாஜக கட்சிக்கு மட்டும் தான் ஓட்டு சதவீதம் அதிகரித்துள்ளது, எதிர்காலத்தில் தமிழகத்தில் மிகப்பெரிய சக்தியாக பாஜக வளரும் என்றும் அதற்கு காரணம் அது திராவிடியன் ஸ்டாக்கின்னுடைய நேர்மையின்மை, ஊழல், உளறல் என்றும் குறிப்பிட்டார்.

மேலும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சின்னவரா என கேட்ட ஹெச் ராஜா, உளறல் மகா மன்னன் என்றும் உதயநிதி மீதான பெங்களூரு வழக்கு குறித்து பேசிய ஹெச் ராஜா, இடி போல பிள்ளை வந்தால், மடி தாங்குமா.. என்ற ஒரு பாடல் உள்ளது. அந்த மாதிரி ஸ்டாலினுக்கு ஒரு பிள்ளை என நக்கலடித்தார்.

மேலும் இன்னும் 50 நாட்களில் அரை டஜன் அமைச்சர்கள் சிறைக்கு செல்வார்கள் என்று கூறிய ஹெச்.ராஜா தற்போது உதயநிதியை அட்டாக் செய்துள்ளார் ஹெச் ராஜா.

நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் மாநில கட்சிகளும் தேசிய கட்சிகளும் தீவிர தேர்தல் பணிகளில் இறங்கியுள்ளன. இம்மாத இறுதியில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் கட்சிகள் தேர்தல் குழு நிர்வாகிகளை நியமித்து அடுத்தக்கட்ட பணிகளில் இறங்கியுள்ளன.

அந்த வகையில் பாஜக சார்பாக தேர்தல் ஒருங்கிணைப்பு குழு மற்றும் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பாஜக தேர்தல் ஒருங்கிணைப்பு குழு தலைவராக சக்கரவர்த்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார். தேர்தல் அறிக்கை தயாரிக்க ஹெச்.ராஜா தலைமையில் 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version