ஆளுங்கட்சியின் அத்துமீறல் இந்துகோவில் நிலத்தில் கிருஸ்த்துவ தேவாலயம் தடுத்து நிறுத்தியது இந்துமுன்னணி!

கன்யாகுமரி மாவட்டத்தை தொடர்ந்து தற்போது திருநெல்வேலி மாவட்டத்தில் மதமாற்ற சம்பவங்கள் அதிகமாகி வருவது அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அந்த மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் தீடிரென அங்கு பல கிறிஸ்துவ தேவாலயங்கள் முளைக்க ஆரம்பித்துள்ளது.

மேலும் இந்து கோவில் நிலங்களை ஆக்கிரமித்து அதில் கிறிஸ்துவ தேவாலயங்கள் கட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதனை அறிந்த இந்துமுன்னணி இந்து கோவில் நிலங்களை ஆக்கிரமித்து கட்டப்படும் கிருஸ்துவ தேவாலயங்களை எதிர்த்து போராட்டம் சட்ட போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வள்ளியூரில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி முருகன் கோவிலில் உள்ளது. இந்த கோவிலானாது இந்து சமய அறநிலைய துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோவிலின் அறநிலையத் துறை செயல் அலுவலராக பணிபுரிந்தவர் வேலுச்சாமி.

இவர் சுப்பிரமணிய சுவாமி முருகன் கோவிலின் சொத்துக்களை கிறிஸ்தவர்கள் சட்ட விரோதமாக பயன்படுத்திக்கொள்ள வேலுச்சாமி அனுமதி அளித்துள்ளார். இந்த சம்பவம் கடந்த 2009ஆம் ஆண்டு நடந்தது. இதனை தொடர்ந்து அறநிலையத் துறை செயல் அலுவலராக பணியாற்றிய வேலுச்சாமி. மீது புகார் தெரிவிக்கப்பட்டது. இவர் பணி இடமாற்றம் செய்யப்பட்டு புதுக்கோட்டை கீரனூர் பகவதி அம்மன் கோவிலில் பணியமர்த்தப்பட்டார்.

தற்போது திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு தனது செல்வாக்கை பயன்படுத்தி முறைகேடு புகாரில் சிக்கிய வேலுச்சாமியை வள்ளியூர் முருகன் கோவிலுக்கே மீண்டும் செயல் அலுவலராக நியமிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே அறநிலையத் துறை செயல் அலுவலர் வேலுசாமி மீது நீதிமன்றத்தில் வழக்கு இருந்தது. மீண்டும் வள்ளியூர் முருகன் கோவிலுக்கு மாற்றப்பட்டதை தொடர்ந்து எழுந்த குற்றச்சாட்டுக்கு “வேலுச்சாமி, தன் பதவிக்கு ஏற்றபடி நடந்து கொள்ளவில்லை” என நீதிமன்றம் கடுமையாக சாடியிருந்தது.

இந்து முன்னணி முயற்சியால் கோவில் நிலத்தில் தேவாலயம் கட்டும் பணிக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது வேலுச்சாமி நியமிக்கப்பட்ட பின்னர் சர்ச் கட்டுமானப் பணிகளைத் மீண்டும் தொடர்ந்துள்ளதாக இந்து முன்னணி குற்றம் சாட்டியதை அடுத்து தற்போது அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Exit mobile version