இவர் அறியாத ஒரு சொல் அச்சம்.

இவர் அறியாத ஒரு சொல் அச்சம். அதிகாலையில் எழுந்து தினசரி 1008 காயத்ரி ஜபம். இடைவிடாத உழைப்பு.

எப்படி காந்தி சுதந்திர போராட்டத்தை சாமானிய மக்களிடையே எடுத்து சென்றாரோ அதே போல ஹிந்து உணர்வை ஹிந்து முன்னணி வாயிலாக கிராமம் கிராமமாக கொண்டு சென்றார்.

பார் வாழ வழி காட்டும் சனாதன தர்மத்துக்காக உழைப்பதை தேச விரோத சக்திகள் பொறுப்பார்களா? விழுந்தது அரிவாள் வெட்டு. தலையில் போட்டார்கள். அவர் தலைக்கு அந்த காவி மறைப்பு அணிய துவங்கியது அந்த பெரிய பள்ளத்தை மறைக்கவே. வேறு யாராவது அதே இடத்தில் இருந்தால் போதும் தேச சேவை என்று மனம் துவண்டு, வெறுத்து கொஞ்சம் அடக்கி வாசித்திருப்பார்கள். தாக்குதல் பயமே இல்லையே.. சேவையை நிறுத்தவே இல்லை

பல நாள் கழித்து அவரை சந்திக்கும்போது எப்படி இருக்கீங்க ஜி என்றேன். உன்னை மறக்கவில்லை என்று சொல்லி, நன்றாக இருக்கிறேன் என்றும் சொல்வதற்கு பதில் ஆனந்தமாக இருக்கிறேன் என்றார்.

இவருக்கு மோட்சமெல்லாம் கிடைக்காது. கிடைத்தாலும் வேண்டாம் என்று மீண்டும் வருவார். அவ்வளவு தேச பக்தி, நாட்டுப்பணியின் மீது ஆர்வம். போயிருப்பது வேறு உடலை மாற்றி வர. இறந்து போகவில்லை இராம கோபாலன் அவர்கள். வேறு நல்ல புது துணி மாற்றி வர போயிருக்கிறார்.

போய்ட்டு வாங்க ஜி. எப்படி இருக்கீங்க என்று மீண்டும் உங்களை கேட்பேன். ஆனந்தமாக இருக்கிறேன் என்று சொல்ல வேண்டும்.

கட்டுரை : எழுத்தாளர் ஆனந்த் வெங்கட்.

Exit mobile version