முத்து நகரில் இன்று இனிதே ஆரம்பமாகும் இந்து வியாபாரிகள் சங்கம்.

இன்று தூத்துக்குடியில் தமிழ்நாடு இந்து. வியாபாரிகள் சங்கத்தின் துவக்க விழா
நடைபெற இருக்கிறது. ஹெச்.ராஜா அவர்கள் தலைமையேற்று இந்த வியாபார சங்கத்தை துவக்கி வைக்கிறார்..

இந்த சங்கம் கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்கு முன் இதே தூத்துக்குடி யில் இதே காலகட்டத்தில் உருவான தமிழ்நாடு மெர்கண்டைல் பேங்க் மாதிரி உலகம் முழுவதும் பலகிளைகளை பரப்பி வளர வாழ்த்துவோம்..

என்னப்பா வியாபாரத்துக்கு மதம் தேவையா? என்று நிறைய பேர் கேட்கலாம்.எனக்கு தெரிந்து இந்துக்களிடம் வியாபாரத்தில் மதம் பார்க்கும் வழக்கம் இல்லை.ஆனால் இஸ்லாமியர்களிடம் நிறைய இருக்கிறது. அது தான் அவர் களின் மிகப்பெரிய பலம்.

எங்கப்பா ஒரு தீவிர இந்துத்வவாதி என்பதால் அவர் தொழில் ரீதியாக இழந்த வருமானம் எங்களுடைய குடும்பத்தை பலவீனமாக்கியதே தவிர அப்பாவின் கொள்கையை உறுதியாக்கிக்கொண்டே இருந்தது. அப்பாவின் இந்துத்வா அடையாளத்தினால் அவர் நிறைய முஸ்லிம்களுடன் வியாபாரம் செய்ய முடியாது போனது.


அதற்காக எங்கப்பா வருத்தப்பட்டதே கிடை யாது தன்னுடைய பிழைப்புக்காக கொள்கை யை விட்டுக்கொடுக்காது உறுதியாக நின்றார்.

அப்பொழுதெல்லாம் நாமும் தொழில்ரீதி யாக ஒன்று படும் காலம் வரும் என்று தன் னை தேடி வரும் நண்பர்களிடம் அடிக்கடி கூறுவார். அந்த காலம் வந்து விட்டது என்றே நான் நினைக்கிறேன்.

நான் எங்கள் ஏரியாவில் ஒரு பாய் கடையில் தொடர்ந்து டீ குடிப்பேன்.

அவர் எங்கள் ஊரை சேர்ந்தவர் என்பதால் நட்பு கொஞ்சம் தீவிரமாக இருக்கும். நான் சிசிடிவி வேலைகளை செய்து வருவதால் அவரும் மாப்ள நீ தான் என் கடைக்கு சிசிடிவி மாட்ட வேண்டும் என்று கூறி க்கொண்டு இருந்தார்.

ஒரு நாள் அவர் கடையில் டீ குடித்துக்கொ ண்டே ஓரமாக நின்று மொபைலில் பிஜேபி நண்பர் ஒருவருடன் அரசியல் பேசிக்கொ ண்டு இருந்தேன்.ஆனால் எனக்கு பின்னால்
அவர் நின்று நான் பேசியதை அவர் கேட்டுக்கொண்டு இருப்பார் என்று நான் எதிர்பார்க்க வில்லை .

என் பேச்சு முடிந்தவுடன் என்னை பார்த்து நீ பிஜேபிக்காரனா பார்த்தால் தெரிய வில்லை என்று கூறி விட்டு பேச்சை குறைத்துக் கொ ண்டார்.சில நாட்கள் கழித்து பாய் கேமரா மாட்டி விடலாமா என்று கேட்க பதிலுக்கு அவர் ஒற்றை வார்த்தையில் நான் வேற ஆளை வைத்து பார்த்து கொள்கிறேன் என்று கூறிவிட்டார்.

இதை எதற்கு கூற வருகிறேன் என்றால் அவர்களுக்கு எதிரான சிந்தனை உடையவர்கள் என்றால் ஒரு சிறு பிசினஸ் கூட அவர்களிடம் செய்ய அவர்களின் மனம் ஒத்து கொள்ள மறுக்கிறது. ஆனால் நான் அப்படியல்ல நான் இன்றும் அவர்களின் கடையில் தான் டீ குடி த்து வருகிறேன்.

இந்த பிசினஸ் சிந்தனை நம்முடைய மக்களி டையே கூட இப்பொழுது பரவலாக ஏற்பட ஆரம்பித்து விட்டது. சில மாதங்களுக்கு முன் செ ன்னையில் இருந்து ஒரு போன் கால் வந்தது நான் உங்களுடைய பேஸ் புக் ப்ரண்ட் நீங்க சிசிடிவி பன்னுவிங்களா எங்கள் சைட்டுக்கு அர்ஜெண்டா 16 கேமிரா வேண்டும் கொட்டேஷன் அளியுங்கள் உடனே ஆர்டர் தருகிறேன் என்றார்.

நானும் சார் நான் அங்கு வந்து இன்ஸ்டால் செய்து விட்டு வந்தால் நாளை சர்விஸ்க்கு டிலே ஆகலாம் அதனால் என்னுடைய நண்பர்
ஒருவர் சென்னையில் இருக்கிறார் அவரை அனுப்பட்டுமா? என்று கேட்க அவரும் சரி என்றார்.

நண்பர் உடனே கொட்டேஷன் அளிக்க அவரும் சிசிடிவி ஆர்டர் கூடவே நெட்வொர்க் ஆர்டர் என்று அளித்து விட்டார்.சும்மா இல்லீங்க
சுமார் 2 லட்ச ரூபாய் ஆர்டர் கூடவே 50சதவீத அட்வான்ஸ்.

தேங்க்ஸ் பிரதர் இதுவரை இதை கூட நான் அவருக்கு கூறவில்லை. சென்னை
சென்று வேலை நடைபெறும் பொழுது அவரை நேரடியாக சந்தித்து நன்றி சொல்ல நினைத்து இருந்தேன் ஆனால் முடியவில்லை.

ஸாரி பிரதர் என்னை மன்னித்து கொள்ளுங்கள்.நான் உங்களை பகிங்கரப்படுத்தினால் அதை நீங்கள் விரும்ப வில்லை என்றால்
இன்னும் அதிகமாக தவறு செய்தவனாக
ஆகி விடுவேன் அதனால் தான் உங்கள் பெ யரை கூற வில்லை

இதை எதற்கு கூறவருகிறேன் என்றால் ஒரு 2 லட்ச ரூபாய் ஆர்டரை என்னுடைய முகமே பார்க்காது தன்னுடன் பேஸ் புக் நட்பு வட்டத்தில் இருக்கிறார் தன்னைப் போலவே ஒத்த சித்தா ந்தத்தில் பயணிக்கிறார் என்ற ஒரே ஒரு காரணத்திற்காக எனக்கு ஒருத்தர் தருகிறார் என் றால் அவருடைய பற்றும் சிந்தனையும் நம் முடைய மதத்தின் மீது எவ்வளவு ஆழமாக இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.

முஸ்லிம்கள் அவர்களிடையே தான் தொழில் ஒருங்கிணைப்பு வைத்து இருக்கிறார்கள்.நம்மிடமும் அவர்களிடையே உள்ளது மாதிரி தொழில் ஒருங்கிணைப்பு வேண்டும் என்றால் அதற்கு இந்த மாதிரியான மத ரீதியிலான
தமிழ்நாடு இந்து வியாபாரிகள் சங்கம் மாதிரியான அமைப்புகளை நாம் வரவேற்று ஊக்குவிக்க வேண்டும்.

ஒரு நாட்டின் மீது போர் புரிந்து தாக்கி அவர்களை அழித்து அதன் மூலம் கிடைக்கும் வெ ற்றியை விட இப்பொழுது அந்த நாட்டின் மீது பொருளாதார தடைகளை விதித்து அவர்க ளை வழிக்கு கொண்டு வருவதையே வல்லரசு நாடுகள் விரும்புகின்றன.இது தான் நாக ரிக காலத்தின் அறவழிப்போராகும்.

நம்முடைய எதிரிகள் நம் மீது திணிக்கும் ஆயுதப் போரை புறக்கணித்து கத்தியின்றி ரத்த மின்றி நாம் வெல்ல பொருளாதார ரீதியாக நாம் உயர்வடைய வேண்டும்.

அதற்கு இந்து வியாபாரிகள் சங்கத்தை தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் கொண்டு சென்று விரிவாக்கி நம்மிடையே வர்த்தகத்தை ஒருங்கிணைத்து உயர்ந்திட வேண்டும்.

கட்டுரை :- வலதுசாரி சிந்தனையாளர் விஜயகுமார் அருணகிரி.

Exit mobile version