வங்கதேசத்தில் தாக்கப்பட்ட இந்துக்கள்! சேவ் சிரியா சேவ் பாலஸ்தீனம் என ஒலித்தவர்கள் எங்கே! 2 பேர் கொலை 90 கோவில்கள் சேதம்

இந்தியாவில் துர்கா பூஜை மிக சிறப்பாக கொண்டாடுவது போல் வங்கதேசத்திலும், அங்கு வசிக்கும் சிறுபான்மை இந்துக்களால் துர்கா பூஜை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. வங்கதேசத்தில் மொத்த மக்கள் தொகையில் குறிப்பிட்ட சதவீதத்துக்கும் அதிகமான இந்துக்கள் சிறுபான்மை மக்களாக வாழ்ந்து வருகிறார்கள்.

இந்த ஆண்டும் துர்கா பூஜையை முன்னிட்டு, தாங்கள் வசிக்கும் பகுதிகளில் பந்தல்கள் அமைத்து, துர்கா சிலைகளை பிரதிஷ்டை செய்து இந்துக்கள் வழிபட்டு வந்தார்கள். அங்கு வந்த வாங்க தேச இஸ்லாமியர்கள் பந்தலை தகர்த்து துர்கா சிலையை சேதப்படுத்தினர். வழிபாட்டில் ஈடுபட்டிருந்த ஹிந்துக்கள் மீது கொடூர தாக்குதல் நடத்தினர். இதில் ௧௦௦க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர்.

இதைத் தொடர்ந்து சந்த்பூர், ஹாஜிகன்ஜ், பெகுலா உள்ளிட்ட நகரங்களில் உள்ள இ ந்து கோவில்கள் மீது வன்முறையாளர்கள் தாக்குதல் நடத்தினர். ஹாஜிகன்ஜில் கோவில் மீது தாக்குதல் நடத்தியவர்களை கலைக்க காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இதில் நான்கு பேர் உயிரிழந்தனர்.’துர்கா பூஜை விழாவில் குரான் அவமதிக்கப்படவில்லை. இந்த கலவரத்தின் பின்னணியில் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ஜமாத்தே இஸ்லாமி அமைப்பு உள்ளது’ என, காவல் துறையினர் தெரிவித்தனர்.ஹிந்துக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது.

வங்தேசத்தில் இந்துக்களுக்கு எதிரான வன்முறை தொடர்கிறது. நவகாளி மாவட்டம் பெகும்கன்ஜ் பகுதியில் உள்ள கோவிலில் துர்கா பூஜையின் இறுதி நாளான நேற்று முன்தினம் சிறப்பு வழிபாடு நடந்தது.

அப்போது ௨௦௦க்கும் அதிகமான வன்முறையாளர்கள் கோவிலுக்குள் அதிரடியாக புகுந்து வழிபாட்டில் ஈடுபட்டிருந்த ஹிந்துக்கள் மீது தாக்குதல் நடத்தினர்; கோவிலையும் சேதப்படுத்தினர்.இதைத் தடுக்க வந்த கோவில் நிர்வாக உறுப்பினர் ஒருவரை அடித்துக் கொன்றனர். இந்த தாக்குதலில் ஹிந்துக்கள் பலர் காயம் அடைந்தனர்.

வங்கதேசத்தில் தற்போது ௧௨க்கும் அதிகமான மாவட்டங்களில் வன்முறை பரவியுள்ளது. இங்கு எல்லை பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.பல மாவட்டங்களில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டு, வன்முறையில் ஈடுபடுவோரை உடனே கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பலஸ்தீன்,சிரியா,என அங்கு வாழும் மக்களுக்கு இங்கிருந்து ஆதரவு கொடுக்கும் அமைப்புகள் சிறுபான்மை அமைப்புக்கள் அண்டை நாட்டில் இஸ்லாமியர்கள் அதிகமாக வாழும் வங்கதேசத்தில் சிறுபான்மையினராக இருக்கும் ஹிந்துக்கள் மீது தாக்குதல் நடைபெற்றதுக்கு ஒரு அமைப்பும் கண்டன குரல் எழுப்பவில்லை . சிரியாவில் இஸ்லாமியர்கள் தாக்கப்பட்டால் காப்பாற்றுங்கள் என இங்கு போஸ்டர் ஓட்டுவார்கள். அவர்கள் நாட்டில் ஹிந்துக்கள் தாக்கப்பட்டால் வாய் மூடி மௌனம் சாதிப்பார்கள்.

இந்தியா மட்டுமே அனைவருக்கும் அனைத்து வசதிகளும் பாதுகாப்பாக வாழும் நாடக இருக்கிறது. அப்பேற்பட்ட இந்தியாவையும் அங்கு வாழும் பெரும்பான்மை இந்துக்களையும் பழிக்காமல் வாழுங்கள் மற்ற மதத்தினர் என்ற எண்ணம் இந்து மக்களிடையே அதிகரித்துள்ளது

Exit mobile version