மஹாளய அமாவாசையை முன்னிட்டு தங்களின் குழந்தைகள் நலம் வேண்டி, முன்னோருக்கு திதி தர்ப்பணம் செய்யும் வழக்கத்தை நீண்ட நாட்களாக ஹிந்துக்கள் (அனைத்து சாதியினரும்) தங்களது வழக்கமாக, கடமையாக, உரிமையாக, நம்பிக்கையாக கடைபிடித்து கொண்டிருக்கும் நிலையில், இன்று அவர்களது உரிமைகள் இன்று மறுக்கப்பட்டும், மிதிக்கப்பட்டும் வருவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. மயிலாப்பூரில் இன்று கபாலி கோவில் குளத்திற்கு மக்கள் வந்த வண்ணம் இருந்தபோதும், காவல்துறையினர் அங்கு அனுமதிக்கவில்லை.
இதனால் மக்கள், கோவிலை ஒட்டிய பல்வேறு தெருக்களில் பல இடங்களில் தங்களது கடமையை நிறைவேற்ற வரிசையில் நின்று பரிதவித்து வருகின்றனர். மேலும், இன்று காலை அந்த தெருக்களில் இருந்த பொதுமக்களிடம், காவல்துறையினர் முரட்டுத்தனமாக நடந்து கொண்டதாகவும், மக்கள் கைகளில் இருந்த பழம், தேங்காய் உள்ளிட்டவைகளை தட்டி பறித்து கீழே தள்ளியதாகவும் சொல்லப்படுவது, இந்த அரசு அரக்கத்தனமாக நடந்து கொள்வதையே வெளிப்படுத்துகிறது. தொடர்ந்து மக்கள் வரிசையில் நின்று தங்களின் கடமையை செய்து வருகிறார்கள். சினிமா ஷூட்டிங்கிற்கு கடற்கரையை பயன்படுத்த அனுமதிக்கும்.
தமிழக அரசு, மக்களின் நம்பிக்கைகளை அவமதித்து, மிதித்து அவமானப்படுத்துவது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. பாதிக்கப்பட்ட, அவமதிக்கப்பட்ட மக்கள் இந்த அரசின் ஹிந்து விரோத போக்கை வன்மையாக கண்டிக்கிறார்கள். மக்களின் கலாச்சாரத்தை, நம்பிக்கைகளை அழித்து விட்டால் ஹிந்து மதத்தை வேரறுத்து விடலாம் என தி மு க அரசு நினைக்குமேயானால், அது பகல் கனவாக தான் முடியும்.
இதற்கு இந்த தி மு க அரசு பதில் சொல்லியே ஆக வேண்டும். அரசன் அன்று கொல்வான் என்பதற்கேற்ப இன்று மக்களின் நம்பிக்கைகளை அழித்து விட்டதாக நினைத்து கொக்கரிப்பவர்கள், தெய்வம் நின்று கொல்லும் என்பதை உணரும் நாள் வெகு தொலைவில் இல்லை.தமிழக பாஜக மாநில செய்தித்தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.