நான் தி.மு.க உறுப்பினர் (வி.சி.க பொ.செ) எம்.பி ரவிக்குமார்! உயர்நீதிமன்றத்தில் பிரமாண பாத்திரம் தாக்கல்

RAVIKUMR Oredesam

RAVIKUMR Oredesam

கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி திமுக கூட்டணியில் தேர்தலை சந்தித்தது. ஆனால் திமுக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் கூட்டணி கட்சிகளை
வற்புறுத்தியது.

இதனை தொடர்ந்து வி.சி.க பொது செயலாளர் ரவிக்குமார், இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் பாரிவேந்தர், ம.தி.மு.கவை சேர்ந்த கணேசமூர்த்தி மற்றும் கொங்கு மக்கள் கட்சியைச் சேர்ந்த சின்னராஜ் ஆகியோர் திமுக சின்னமான உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.

மாற்று கட்சியினர் திமுக சின்னத்தில் போட்டியிடுவது சட்டத்திற்கு புறம்பானது, அவர்களின் வெற்றி செல்லாது என அறிவிக்கக் கோரி தேசிய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எல்.ரவி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் விழுப்புரம் எம்.பி.,யும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொது செயலாளருமான ரவிக்குமார், ‛தான் திமுக உறுப்பினர்தான்’ என பதில் மனு தாக்கல் செய்திருக்கிறார்.

இது குறித்து பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கூறுகையில் :

“நான் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் உறுப்பினர் அல்ல. தி மு க உறுப்பினர். வி சி க வின் வேட்பாளர் தி மு கவின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டதாக வழக்கு தொடுக்கப்பட்டிருப்பது உண்மைக்கு புறம்பானது” என்று திரு ரவிக்குமார் அவர்கள் சென்னை உயர்நீதி மன்றத்தில் பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்துள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான அவர், 2019 தேர்தலில் அவர் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டது அனைவருக்கும் தெரிந்ததே. இருப்பினும் கடந்த 2 வருடங்களில் பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பிரதிநிதியாகவே பேசி வந்தார்.

நான் பலமுறை பல நிகழ்ச்சியின் இடையீட்டாளர்களிடம் ஒரே கட்சியை சார்ந்த இருவர் எப்படி நிகழ்ச்சியில் பங்கேற்கலாம் என்றெல்லாம் கூட கேட்டிருக்கிறேன். ஆனால் அது குறித்து பதில் பேசாது இருந்தனர் இடையீட்டாளர்கள்..

நீதிமன்றத்திலேயே தான் தி மு க வின் உறுப்பினர் என்று பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ள நிலையில், இனி திரு ரவிக்குமார் அவர்களை தி மு கவின் பிரதிநிதி என்றே அழைப்பார்கள் என நம்புகிறேன்.
நாராயணன் திருப்பதி.

Exit mobile version