காவல் பணியிலிருந்து ராஜினாமா செய்கிறேன்! அண்ணாமலை தமிழகத்தின் அடுத்த முதல்வர்!

Annamalai

Annamalai

நேற்று இந்தியாவின் 77-வது சுதந்திர தின விழா இந்தியா முழுவதும் வெகுவிமர்சையாகக் கொண்டாடப்பட்டது. ஆனால் தமிழகத்தில் நடந்த மூன்று சம்பவங்கள் தான் தற்போது தமிழகம் முழுவதும் பேசுபொருளாகி உள்ளது. இந்த மூன்று சம்பவங்களும் சமூக வலைத்தளங்கள் ஆக்கிரமித்துள்ளது.

முதல் சம்பவம் : தலைமைக் காவலராகப் பணியாற்றி வருபவர் கார்த்திகேயன். கேணிக்கரை காவல் நிலையத்தில் பணியாற்றி வருகிறார். தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் இணைய போவதாக கூறி சமூக வலைதளங்களில் வெளியிட்ட வீடியோ.

இரண்டாவது சம்பவம் : தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்ச்சி ஒன்றில் கும்பகோணம் திமுக சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை அன்பழகன் தேசிய கொடி ஏற்றும் போது கொடி அறுந்து கீழே விழுந்த சம்பவம்

மூன்றாவது சம்பவம் : சென்னை ஓட்டேரி பகுதியை சேர்ந்த காவலர் கோதண்டபாணியின் மகள் அரசு மருத்துவமனையின் அலட்சியத்தால் கால்கள் பறிபோனதற்கு காரணமானவர்கால் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என டிஜிபி அலுவலகத்திற்கு முன், நடுரோட்டிலேயே உட்கார்ந்து தர்ணா செய்தார். இதனால், அங்கு பரபரப்பு அங்கு ஏற்பட்டது.

இராமநாதபுர மாவட்டம் கேணிக்கரை காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணியாற்றிவரும் கார்த்திகேயன் என்பவர், தனது காவலர் பணியை ராஜினாமா செய்வதாகக் கூறி சமூக வலைதளங்களில் ஒரு வெளியிட்ட வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியது.மேலும், கார்த்திகேயன் ஒரு ஆடியோ ஒன்றையும் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டிருந்தார். ,

இந்த நிலையில் தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்த பின் பேசிய கார்த்திகேயன் காவல்துறையில் பணியாற்றிக் கொண்டு என்னால் சமூகத்தில் நடக்கும் அவலங்கள் குறித்த கருத்துக்களை வெளிப்படையாக பேச முடியவில்லை. அதன் காரணமாக என்னுடைய வேலையை ராஜினாமா செய்துள்ளேன். மேலும் நான் சமூக பிரச்சனைகள் குறித்து ஆய்வு செய்து வருகிறேன்.

அதற்கான வேலைகளை தொடங்கி விட்டதாகவும்,மேலும் 2026 தேர்தலில் அண்ணாமலை தலைமையில் ஆட்சி அமையும். அண்ணாமலை அவர்கள் தான் முதல்வர். பாஜகவில் இணைந்து மக்களுக்கு சேவை ஆற்ற உள்ளதாக கூறினார் கார்த்திகேயன்

Exit mobile version