தமிழக விளையாட்டு துறை அமைச்சரும் முதல்வரின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில், சென்னையில் நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் “சனாதன தர்மத்தை பின்பற்றுவர்களுக்கு எதிராக உதயநிதி ஸ்டாலின் வெறுப்பு பிரச்சாரம் செய்தார்.
அவரது இந்த பேச்சு ஹிந்துக்கள் மத்தியில் பெரும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது. பொது மக்கள் முதல் மத்திய அமைச்சர்கள் வரை உதயநிதிக்கு தங்களது கடும் கண்டனத்தை பதிவு செய்துவருகின்றனர்.இந்த நிலையில் சனாதனம் குறித்து பேசிய உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்த வேண்டும் என்று 262 அதிகாரிகள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
அமைச்சர் உதயநிதி சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசியது சர்ச்சையான நிலையில், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசிய அமைச்சர் பொன்முடி சனாதனத்தை எதிர்க்க உருவாக்கப்பட்டது இந்தியா கூட்டணி என்று பேசியதுசர்ச்சையானது.
இந்த நிலையில் ‘டெங்கு, மலேரியா, கரோனா வைரஸ் ஆகியவற்றை ஒழிப்பதுபோல் சனாதனத்தை ஒழிக்க வேண்டும், வெறுமனே எதிர்க்கக் கூடாது. சனாதனத்தை ஒழிக்க வேண்டும்’ என பேசியது தனிப்பட்ட முறையில் தான், அமைச்சர் என்ற முறையில் பேசவில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் அமைச்சர் உதயநிதி தரப்பில் வாதிடப்பட்டது.
.
அமைச்சராக பொறுப்பில் இருந்து கொண்டு அரசியலமைப்புக்கு எதிராக பேசியதாக உதயநிதி, சேகர்பாபு, ஆ.ராசாவுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை நேற்று நடைபெற்றது. அப்போது உதயநிதி தரப்பில் அளித்த விளக்கம்: ”சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என கூறியது அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானதா? தனக்கு எதிராக வழக்கு தொடர்ந்ததில் கண்ணுக்கு தெரியாமல் பா.ஜ.,வின் பங்கு உள்ளது.
தனிப்பட்ட முறையில் பேசினேனே தவிர, அமைச்சர் என்ற முறையில் பேசவில்லை. சனாதனம் பற்றி அரசியலமைப்பு அல்லது வேறு எந்த சட்டத்திலும் எதுவும் குறிப்பிடப்படவில்லை. இறையான்மைக்கு விரோதமாக பேசியதாக குற்றம் சாட்டும் மனுதாரர்கள், அதற்கான ஆதாரங்களை வழங்கவில்லை.” இவ்வாறு விளக்கமளிக்கப்பட்டது.
ஆட்சியே கவிழ்ந்தாலும் பரவாயில்லை சனாதனம் குறித்து பேசிய பேச்சை பின் வாங்கமாட்டேன் என கூறிய உதயநிதி தற்போது நான் அமைச்சராக பேசவில்லை என பல்டி அடித்துள்ளார். இந்த வாதங்களை கேட்ட நீதிபதி அனிதா சுமந்த், வழக்கின் அடுத்த விசாரணையை அக்டோபர் 31ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.