எம்.பி.பி.எஸ்., படிக்க விரும்பினால் ‘நீட்’ தேர்வுக்கு தயாராகுங்கள்: கவர்னர் ரவி அறிவுரை.

 மருத்துவம் படிக்க ஆசை இருப்பவர்கள் நீட் தேர்வுக்கு தயாராக வேண்டும் என பிளஸ் 2 படித்து முடித்த மாணவர்களுக்கு கவர்னர் ரவி அறிவுரை வழங்கியுள்ளார்.

பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுடன் இன்று(மே 10) ராஜ்பவனில் கவர்னர் ரவி கலந்து உரையாடினார். கலந்துரையாடலில் சமீபத்தில் வெளியான பிளஸ் 2 முடிவுகளில் 600க்கு 600 மதிப்பெண் எடுத்த மாணவி நந்தினி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது கவர்னர் ரவி பேசியதாவது: மருத்துவம் படிக்க ஆசை இருப்பவர்கள் நீட் தேர்வுக்கு தயாராக வேண்டும். இலக்கை அடைவதில் மாணவர்களுக்கு தெளிவு இருக்க வேண்டும். மொபைல் போன் பயன்படுத்துவதில் மாணவர்களிடையே கட்டுப்பாடு வேண்டும். படிப்பு சம்பந்தமான விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

வணிகவியல் பாடத்தில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்கள் சிஏ படிப்பும், வழக்கறிஞர் ஆக விரும்பம் கொண்ட மாணவர்கள் சட்ட படிப்பை தேர்வு செய்ய வேண்டும். மாணவர்கள் அடுத்தடுத்த இலக்கை நோக்கி செல்ல வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Exit mobile version