இந்தியாவின் முதல் சைனிக் ராணுவப்பள்ளி பெரம்பலூரில் தான் அமைய உள்ளது ஐஜேகே மாநாட்டில் அண்ணாமலை.

திருச்சியில் நடைபெற்ற, இந்திய ஜனநாயகக் கட்சியின் ‘தேசம் காப்போம், தமிழை வளர்ப்போம்’ மாநில மாநாட்டில் தமிழக பாஜக
சார்பாக கலந்து கொண்டு உரையாற்றும் வாய்ப்பு கிடைத்ததில் மிகுந்த மகிழ்ச்சி.

2024 ஆம் ஆண்டு நாம் பேசும், பண அரசியலுக்கு எதிரான, ஊழலற்ற, நேர்மையான அரசியலைக் கொள்கைகளாகக் கொண்டு தொடங்கப்பட்ட இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனர் டாக்டர் திரு.பாரிவேந்தர் எம்பி ஐயா அவர்கள், பெரம்பலூர் தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக, கடந்த ஐந்து ஆண்டுகளில் தொகுதிக்கும் மக்களுக்கும் செய்துள்ள பணிகள் போற்றுதலுக்குரியவை. தனது சொந்தப் பணம் சுமார் 127 கோடி ரூபாய், தொகுதி மேம்பாட்டிற்காகச் செலவு செய்து, இந்தியாவின் தலைசிறந்த பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவராக இருக்கிறார்.


ஐயா பாரிவேந்தர் எம்பி அவர்கள் முயற்சியால், பெரம்பலூருக்கு ரயில் போக்குவரத்து அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவில் புதிதாகத் தொடங்கவிருக்கும் 100 சைனிக் பள்ளிகளில் முதல் பள்ளி, பெரம்பலூரில் அமைக்கவும், தனது சொந்தப் பணத்தைச் செலவு செய்யத் தயாராகவிருக்கிறார்.

மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திரமோடி. அவர்கள் மூன்றாவது முறையாகப் பிரதமர் பொறுப்பேற்கும்போது, ஐயா
பாரிவேந்தர் எம்பி அவர்கள், மீண்டும் பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர் கொண்டு வர முழுமுயற்சி மேற்கொண்டுள்ள அத்தனை திட்டங்களையும், அவரே தொடங்கி வைக்க வேண்டுமென்பதே அனைவரின் ஆசையும் விருப்பமும். அதனை நிறைவேற்ற அனைவரும் நிச்சயம் உழைப்போம்.

இந்திய ஜனநாயகக் கட்சியின் தலைவர் அண்ணன் திரு.ரவிபச்சைமுத்து
அவர்கள், தமது தந்தையாரை விட ஒரு படி மேலாக, தமிழகத்தின் மீதும், மக்களின் மீதும், சமூகத்தின் மீதும் அளவற்ற பற்று கொண்டவர். அவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்
இந்திய ஜனநாயகக் கட்சியின் மாநில மாநாட்டின் கொள்கையான, தமிழ் வளர்ச்சி, நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு
நரேந்திரமோடி அவர்களின் கடந்த பத்து ஆண்டு கால ஆட்சியில்தான் நிறைவேறிக் கொண்டிருக்கிறது. உலகம் முழுவதும், தமிழ் மொழியின் பெருமையை நமது பாரதப் பிரதமர் அவர்கள் கொண்டு செல்கிறார். தமிழ் மொழியின் புகழ் மேலும் பரவ, நமது பிரதமர் மோடி அவர்கள், மூன்றாவது முறையாகப் பிரதமர் பொறுப்பேற்க வேண்டும்

மாநாட்டின் மற்றொரு கொள்கையான தேசம் காப்பது, பிரிவினை பேசும் திராவிட அரசியலை அழிப்பதில்தான் முழுமை பெறும். வரும் 2024 பாராளுமன்றத் தேர்தலில், தமிழகத்தில் ஏற்படவிருக்கும் மாற்றம், வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், திராவிட அரசியலை வேரோடு அகற்ற அடிப்படையாக அமையும்.
தமிழ் மொழி வளர, தமிழகம் சிறக்க, வளர்ச்சி அரசியலை தமிழகம் முன்னெடுக்கும். இந்திய ஜனநாயகக் கட்சியின் இந்த தேசம் காப்போம் தமிழை வளர்ப்போம் மாநில மாநாட்டின் மாபெரும் வெற்றி, ஊழலற்ற, நேர்மையான, சாமானிய மக்களுக்கான, தேசியம் சார்ந்த அரசியலைப் பேசும் அனைத்து சக்திகளுக்கும் மாபெரும் உந்து சக்தியாக அமைந்திருக்கிறது

Exit mobile version