காலநிதிமாறனின் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா நோட்டீஸ்.

கலாநிதிமாறனின் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘கூலி’ திரைப்படத்தின் டீசரில் தன்னுடைய அனுமதியின்றி ‘வா வா பக்கம் வா’ பாடலின் இசையை பயன்படுத்தியதாக,
சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அந்த நோட்டீசில்,கூலி (2025) திரைப்படத்தின் டீசரில் இளையராஜாவின் வா வா பக்கம் வா பாடல் மறு உருவாக்கம் செய்யப்பட்டு இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அப்பாடல் மற்றும் இசைக்கு முதல் உரிமையாளரான இளையராஜாவிடம் முறையாக எந்த அனுமதியும் பெறவில்லை என கூறப்பட்டுள்ளது.

இது, காப்புரிமை சட்டம் 1957-ன் கீழ் குற்றம் என்றும் நோட்டீஸில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும் டைரக்டர் லோகேஷ் கனகராஜ் தொடர்ந்து இது போன்ற செயல்களில் ஈடுபடுவதாகவும் இளையராஜா தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இந்த பாடல்களின் ஒட்டுமொத்த உரிமையும் இளையராஜாவுக்கு சொந்தமானது எனவும் அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாடலைப் பயன்படுத்துவதற்கான முன் அனுமதியைப் பெறாவிட்டால் சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் இளையராஜா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version