அண்ணாமலையின் தாக்கம்….சீருடையுடன் பாஜகவில் இணைந்த காவல் ஆய்வாளர்கள் …பொறுக்க முடியாமல் திமுக அரசு செய்த காரியம்?

two-police-officers-suspended-after-joins-to-bjp

two-police-officers-suspended-after-joins-to-bjp

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ‘என் மண் என் மக்கள்’ யாத்திரையை கடந்த ஆண்டு ராமேஸ்வரத்தில் தொடங்கிய இந்த யாத்திரை, தென் மாவட்டங்கள் மற்றும் கொங்கு மாவட்டங்களில் நிறைவு பெற்றது.

தற்போது இந்த யாத்திரை டெல்டா மாவட்டங்களில் நிறைவு பெற்றது . இந்த பயணத்தின்போது செல்போன் மூலம் மிஸ்ட் கால் கொடுத்து பாஜகவில் இணைவது, கூடாரங்கள் அமைத்து நேரடியாக உறுப்பினர்கள் சேர்ப்பது உள்ளிட்ட பல வழிகளில் உறுப்பினர் சேர்க்கையானது நடைபெற்று வருகிறது

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் நடைபயணம் தமிழகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு உதாரணம் கடந்த 27 ஆம் தேதி நாகை மாவட்டத்தில் நடைப்பயணத்தின் போது பா.ஜ.க உறுப்பினர்கள் சேர்க்கை நடைபெற்றது.அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த .காவல் துறை உதவி ஆய்வாளர்கள் ராஜேந்திரன், கார்த்திகேயன் பாஜகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

இது தொடர்பான விடியோக்கள் சமூக ஊடகங்களில் தீயாக பரவியது.இதனால் காவல் துறை சிறப்பு உதவி ஆய்வாளர்கள் ராஜேந்திரன், கார்த்திகேயன் சீருடையில் இருந்தவாறு பாஜகவில் இணைந்ததால் இருவரும் நாகை ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டு இருந்தனர்.

இந்நிலையில், தஞ்சை சரக டிஐஜி உத்தரவின்பேரில் ராஜேந்திரன், கார்த்திகேயன் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.இது திமுகவின் கொடூர முகத்தை காட்டியுள்ளது

Exit mobile version