இந்திய-பாகிஸ்தான் எல்லை பகுதியான காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் ராணுவம், சிஆர்பிஎப்(துணை ராணுவப்படை) மற்றும் காஷ்மீர் மாநில போலீஸ் ஆகியோர் இணைந்து நடத்திய தேடுதல் வேட்டையின் போது மறைந்திருந்த பயங்கரவாதிகள் தாக்கத்துவங்கினர் .
இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த ரானுவத்தினர் மறைந்திருந்த 3 பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்றனர்.
அவர்களிடம் இருந்து அதிபயங்கர ஆயுதங்கள், வெடி பொருட்கள் பறிமுதல் செய்யதுள்ளனர் .

இந்த பயங்கரவாதிகள் அன்சார் கஸ்வா உல் ஹிந்த் என்ற தடைசெய்யப்பட்ட இயக்கத்தை சேர்ந்த பயங்கரவாதிகள் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது.
அவர்களை பற்றிய மேலும் பல விபரங்களும், பயங்கரவாதிகள் வேறு யாராவது பதுங்கி உள்ளனரா என்பது குறித்து அதிரடி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று பாதுகாப்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.