இந்தியாவில் இந்திரா காங்கிராஸ் ஆட்சியில் மட்டுமே ஜனநாயகம் இறந்தது: சோனியாவுக்கு மத்திய அமைச்சர் பதிலடி.

பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான பாஜக மத்திய அரசு, ஜனநாயகத்தின் மூன்று தூண்களையும் தகர்த்து வருவதாக கூறிய காங்., முன்னாள் தலைவர் சோனியாவின் குற்றச்சாட்டுக்கு, ‛இந்திய ஜனநாயகம், இந்திரா ஆட்சியில் கொண்டுவரப்பட்ட எமர்ஜென்சி நேரத்தில் மட்டுமே இறந்தது’ என மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ பதிலடி கொடுத்தார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா, தனியார் பத்திரிகை ஒன்றில், ‛பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு இந்திய ஜனநாயகத்தின் மூன்று தூண்களையும் முறையாக தகர்த்து வருகிறது. மோடி அரசாங்கம் பல முக்கிய மாநிலங்களில் ஒவ்வொரு அதிகாரத்தையும் தேர்தல்களையும் தவறாக பயன்படுத்துவதில் குறியாக உள்ளது’ என மத்திய அரசின் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை தெரிவித்து இருந்தார்.

சோனியாவின் குற்றச்சாட்டுக்கு மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது: இந்திய ஜனநாயகம், எமர்ஜென்சி அமலான 1975ல் மட்டுமே இறந்தது. அதன் பிறகு அது மீண்டும் நடக்கவில்லை, ஒரு போதும் நடக்காது. நாங்கள் சட்டத்தின் ஆட்சியை நம்புகிறோம். நாட்டில் ஜனநாயகத்தின் ஆத்மா மிகவும் உயிர்ப்புடன் உள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திடம் அனைத்து கேள்விகளையும் கேளுங்கள், ஆனால் உங்கள் சொந்த நாட்டை கேள்வி கேட்காதீர்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Exit mobile version