போருக்கு தயாராகும் இந்தியா பாகிஸ்தான்….

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் போர் வரக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து 370 மற்றும் 35A வை மத்திய அரசு அதிரடியாக நீக்கியது. இதனால் இரு நாடுகளுக்கு இடையே பதற்றம் நீடித்தது. உலக அளவில் காஷ்மீர் பிரச்சனை பூகம்பமாய் வெடித்தது. கடந்த 50 நாட்களாக ராணுவ கட்டுப்பாட்டில் காஷ்மீர் இருந்து வருகிறது.

பாக்கிஸ்தான், ஐ.நா சபை வரை சென்று போராடியும், எதுவும் செய்ய முடியவில்லை. மேலும் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் இந்திய அரசு தயாராக இல்லை. மேலும் பாகிஸ்தான் ஆக்கிரமைப்பு காஷ்மீர் பகுதியையும் கைப்பற்ற இந்திய அரசு முயற்சி செய்து வருகிறது. இதனால் பாகிஸ்தான் கவலையில் இருக்கிறது. இந்தியாவுடன் போர் தொடுத்தால் நங்கள் தோற்றுவிடுவோம் என்றும் பாக்கிஸ்தான் அரசு பேசி வருகிறது.

பாக்கிஸ்தான் சீன ஆதரவுடன் இந்திய மீது போர் தொடுக்க முனைப்பாய் இருக்கிறது, ஆனால் உலக நாடுகள் இந்தியாவிற்கு ஆதரவாக செயல்பட்டு வருவதால் என்ன செய்வதென்று தெரியாமல் பாகிஸ்தான் குழப்பத்தில் இருக்கிறது. தற்போது இந்தியா பாகிஸ்தான் இடையே போர் வரலாம் என்றும் உலக நாடுகள் பேசி வருகிறது. ஒருவேளை இருநாடுகளுக்கிடையே போர் மூண்டால் பாக்கிஸ்தான் என்ற நாடு உலக வரைபடத்தில் இருக்காது என்றும் உலக நாடுகள் பேசி வருகிறது.

Exit mobile version