இதனால் தான் இந்தியாவை பார்த்து சீனவின் கத்தலும், நேபாளா ஒப்பாரியும் உரக்க கேட்டுகொண்டிருக்கின்றன.

இந்திய ராணுவத்தில் சடுதியான மாற்றங்கள் நிகழ்கின்றன, முன்பு இல்லா பல தளர்வுகள் வந்திருக்கின்றன. அந்த பலத்தோடுதான் எல்லையில் சீன ஆக்கிரமிப்பு பகுதிகளில் இந்தியா நுழைகின்றது

உண்மையில் சீன ஆக்கிரமிப்பு பகுதியில் இந்தியா முதன் முறையாக எல்லை தாண்டி சில இடங்களை கைபற்றியிருக்கின்றது, லடாக்கை ஒட்டிய பகுதியில் இது நடந்திருக்கின்றது. அது ஆக்கிரமிப்பு பகுதி என்பதால் சீனாவால் ஏதும் செய்யமுடியவில்லை

பெரிய மனிதன் அடிபட்டால் வெளிசொல்லமாட்டான், அவன் கவுரவ பாதிப்பு அது.

இந்தியாவும் இந்த பதற்ற நிலையிலும் வியட்நாமுக்கு ஏவுகனை கொடுப்பது முதல் பலவற்றை செய்கின்றது, இந்தியா தன் காலடிக்கு வருவதை பதற்றமாய் கருதும் சீனா மாலத்தீவிலும் இலங்கையிலும் கால்பதிக்கின்றது

இந்த இருநாடுகள் மேலும் இந்திய கவனம் பதிகின்றது, மாலதீவினை ரகசியமாக கண்டிக்கும் இந்தியா இலங்கையில் நேரடியாகவே சீறுகின்றது, இருதினங்களுக்கு முன் மோடி கோத்தபாயாவிடம் போனில் சில எச்சரிக்கைகளை செய்ததாக செய்திகள் கசிகின்றன‌

ஏரி நிறைந்தால் நீர் கசியும், ஆக ஏதோ நடந்திருகின்றது.

இந்திய ராணுவத்தில் என்ன மாற்றம் என்றால் இதுவரை முப்படைகளும் தனி அதிகாரத்தில் இயங்கும், கடற்படையின் விமாதாங்கி கப்பலின் விமானத்தை விமானபடை பயன்படுத்த முடியாது,

தரைபடையின் துப்பாக்கி கடற்படை எடுக்க முடியாது

இப்படி அவை தனி தனி பிரிவுகளாக இருந்தன ஒன்றோடு ஒன்று பரிமாற முடியாது, ஆனால் முப்படைகளின் தலமை தளபதி நியமிக்கபட்டபின் இந்த சட்டம் அகற்றபடுகின்றது.

இனி எந்த படையின் எந்த பொருளையும் தேவைபடின் யாரும் பயன்படுத்தலாம், இது பொதுவாக எந்நேரமும் யுத்தத்துக்கு தயார் எனும் சூழலில் இருப்பது.

ஆக மிகபெரும் மாற்றங்களுடன் எதற்கோ தயாராகின்றது இந்தியா, எல்லையில் சில பகுதிகள் இந்திய வசம் வந்திருக்கின்றன என்பது நிஜம்.

அந்த வலியில்தான் சீன கத்தலும், நேபாளா ஒப்பாரியும் உரக்க கேட்டுகொண்டிருக்கின்றன.

கட்டுரை:- வலதுசாரி சிந்தனையாளர் ஸ்டான்லி ராஜன்.

Exit mobile version