சீனாவின் எல்லைகுள்ளே சென்று மிரட்டிய இந்திய ராணுவம் !கதறும் சீனா!

லடாக்கில் உள்ள கால்வான் பள்ளத்தாக்கில் கடந்த ஜூன் 15ம் தேதி இந்திய – சீன ராணுவ வீரர்களிடையே நடந்த மோதலில், 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். இதில், சீன தரப்பில் உயிரிழப்பு எண்ணிக்கை குறித்த விவரங்கள் இது வரை வெளியிடப்படவில்லை. சீன தரப்பலில் 100க்கும் மேற்பட்டோர் இறந்திருப்பார்கள் என்ற தகவல்கள் கிடைத்துள்ளது.எல்லையில் இருந்து 2 கி.மீ. தொலைவுக்கு சீன வீரர்கள் பின்வாங்கி சென்றார்கள்.

இந்நிலையில், கடந்த 29 ஆம் தேதி சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்த மூக்கையா மலைகளின் முகட்டை இந்தியா கைப்பற்றியது. இந்த சம்பவம் சீனாவிற்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்துள்ளது. நிலைமை இப்படி சென்று கொண்டிருக்க சீனாவை மற்றொரு முறையில் மிரட்டியுளளது இந்தியா சீனாவின் எதிர்ப்பையும் மீறி, தென் சீன கடலில், இந்தியா ஒரு போர்க்கப்பலை நிறுத்தி உள்ளது. மேலும் அந்தமான் நிகோபார் தீவுக்கு அருகிலுள்ள மலாக்கா நீரிணையிலும் இந்திய போர்க்கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் சீனாவின் நடவடிக்கைகளை இந்தியா தொடர்ந்து கவனித்து வருகிறது.

இந்த நிலையில் கிழக்கு லடாக் பகுதியில் பாங்காங் ஏரியின் தென் கரையிலும், ஷென்பாவ் மலைப் பகுதியிலும் எல்லையைக் கடந்து இந்திய வீரர்கள் அத்துமீறி நுழைந்ததாக சீனா குற்றம் சாட்டி உள்ளது. இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள சீன ராணுவ செய்தித் தொடர்பாளர் ஷாங் ஷூலி, இந்திய ராணுவத்தினர் துப்பாக்கிச்சூடு நடத்தி தங்களை அச்சுறுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை என இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. மேலும் சீனா தான் வானத்தை நோக்கி சுட்டது என கூறியுள்ளது!

இந்தியா, சீனா இடையே கடந்த 45 ஆண்டுகளாக எந்த துப்பாக்கிச் சண்டையும் நடந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் லடாக் பிரச்னை மிகவும் தீவிரமானது என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். டெல்லியில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் காணொலி வாயிலாக பங்கேற்று பேசிய அவர்,கடந்த 30 ஆண்டுகளாக சீனாவுடன் எல்லையில் எந்தப் பிரச்னையும் இல்லாததால் அந்நாட்டின் 2வது பெரிய வர்த்தகப் பங்காளியாக இருந்ததாக தெரிவித்துள்ள ஜெய்சங்கர், இதன்மூலமே இருதரப்பிலும் அமைதியும், உறவும் நீடித்ததாகக் குறிப்பிட்டுள்ளார். லடாக் பிரச்னையில் அரசியல் மட்டத்தில் ஆழமான உரையாடல்கள் தேவை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version