அட்டகாசமான கேட்ச், அதிக ரன் சாதனை! ரசிகர்கள் கொண்டாடும் இந்திய கிரிக்கெட் வீராங்கனைகள் ஹர்லீன் தியோல்! மித்தாலி ராஜ்!

கடந்த வாரம் முழுவதும் உலக கிரிக்கெட் ரசிகர்களின் மத்தியில் ட்ரெண்டிங்கில் இருப்பவர்கள் இந்திய கிரிக்கெட் வீராங்கனைகள். எப்போதும் சச்சின் தோனி கோஹ்லி என பேசப்படுவது தான் வழக்கம் அந்த வரலாற்றை மாற்றி எழுதியுள்ளார்கள் இந்திய கிரிக்கெட் வீராங்கனைகள். ஆண்கள் விளையாடும் கிரிக்கெட்டை பார்ப்பவர்கள் தான் அதிகம். அது மாறி தற்போது ஆண்கள் கிரிக்கெட் நிகராக பெண்கள் கிரிக்கெட் விளையாட்டையும் பார்க்க தொடங்கிவிட்டார்கள். கிரிக்கெட் ரசிகர்கள்.

பெண்கள் கிரிக்கெட்டின் சச்சின் மிதலி ராஜ். இவர்தான் இந்திய மகளிர் கிரிக்கெட்டின் திருப்புமுனைக்காக ஆரம்பம் என்றே சொல்லலாம் . இந்திய அணி பெண்கள் கிரிக்கெட்டை உலக கோப்பை வரை அழைத்து சென்றவர். ஆண்கள் கிரிக்கெட்டில் சாதனைகளுக்கு சொந்தக்காரர் சச்சின் என்றால் மகளிர் கிரிக்கெட் சாதனைகளுக்கு சொந்தகாரர் தான் இந்த மிதலி ராஜ். ராஜஸ்தானின் ஜோத்பூரை சேர்ந்தவரான மித்தாலி தமிழைத் தாய் மொழியாக கொண்டவர் .

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் புதிய உலக சாதனையை நிகழ்த்தியுள்ளார். கிரிக்கெட்டின் 3 விதமான போட்டிகளிலும் அதிகமான ரன்கள் குவித்த வீராங்கனை எனும் பெருமையை மிதாலி ராஜ் பெற்றுள்ளார். கிரிக்கெட்டின் ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் ஆகியவற்றில் சேர்த்து இங்கிலாந்து வீராங்கனை சார்லோட்டி எட்வர்ட்ஸ் 10,273 ரன்கள் சேர்த்து உலக சாதனை வைத்திருந்தார். அந்த சாதனையை முறியடிக்க மிதாலி ராஜுக்கு 12 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில், 24-வது ஓவரில் மிதாலி ாாஜ் பவுண்டரி அடித்து எட்வார்ட்ஸ் சாதனையை முறியடித்தார்.

இங்கிலாந்துக்கு எதிரான முதல் 20 ஓவர் போட்டியில் ஆடியது இந்திய அணி இந்த ஆட்டத்தில் இந்திய வீராங்கனை ஹர்லீன் அற்புதமான கேட்ச் ஒன்றைப் பிடித்து அசத்தியுள்ளார். பஞ்சாபைச் சேர்ந்த 23 வயதேயான ஹர்லீன், ஹிமாச்சல் பிரதேச அணிக்காக விளையாடி வருபவர்.சிறுவர்களுடன் சேர்ந்து ‘கல்லி கிரிக்கெட்’ விளையாடி பயிற்சி எடுத்து கொண்ட ஹர்லீன், கிரிக்கெட்டை தனது ‘கரியராக’ தேர்வு செய்தவர்.கடந்த 2019-ம் ஆண்டு ஒரு நாள் மற்றும் டி-20 போட்டிகளில அறிமுகமானார்.2020-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஐசிசி டி-20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில், ஹர்லீன் தியோல் இடம் பிடித்திருந்தார்.ஆஸ்திரேலிய சுழற்பந்துவீச்சாளர் ஷேர்ன் வார்னேவை முன்மாதிரியாக கொண்டவர்

இங்கிலாந்து எதிரான ஆட்டத்தின் போது 19-வது ஓவரில் ஆமி ஜோன்ஸ் சிக்சர் அடிக்க முயன்றார். பந்து சிக்சர் எல்லையைத் தாண்டிப் போகும் என நினைத்தபோது எல்லைக்கோட்டுக்கு அருகே நின்ற இந்திய வீராங்கனை ஹர்லீன் தியோல், அற்புதமாகப் பந்தைப் பிடித்து ஆமி ஜோன்ஸை வெளியேற்றினார். கேட்ச் பிடித்தாலும் நிலை தடுமாறியதால் எல்லைக்கோட்டுக்கு வெளியே செல்ல இருந்தார் ஹர்லீன். உடனே பந்தை தூக்கி மேலே போட்டு விட்டு, எல்லைக்கோட்டுக்கு வெளியே சென்று அடுத்த நொடி உள்ளே வந்து பாய்ந்தபடி கீழே விழ இந்த பந்தைப் பிடித்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார் கடந்த வரம் முழுவதும் உலக அளவில் ட்ரெண்டிங்கில் இருந்தவர்கள் நமது வீராங்கனைகள், தான்என்பதில் பெருமை கொள்வோம். பாரதி கண்ட புதுமை பெண்களை கொண்டாடுவோம்

Exit mobile version