இந்தியா சத்தமே இல்லாமல் ஒருபக்கம் ராணுவ பலம் அதிகரிப்பு மற்றொரு புறம் பொருளாதர வளர்ச்சியில் வேகம் என இரட்டிப்பு வேகத்தில் நகர்ந்து வருகிறது.இது உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் அண்டை நாடுகளின் பிரச்சனைகளை அசால்ட்டாக டீல் செய்து வருகிறார் வாத்தி ஜெய்சங்கர். இந்தியாவை நேரடியாக பகைத்து கொள்ள எந்த நாடும் தற்போது தயாராக இல்லை, அதன் காரணமாகவே கனடா வங்கதேசம் பாகிஸ்தான் போன்ற நாடுகளை சில நாடுகள் தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கிறது.
இந்த நிலையில் இந்தியா தனது ராணுவ பலத்தைத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஏற்கனவே போர்க் கப்பல்கள் எண்ணிக்கையில் அமெரிக்கா சீனாவை ஓவர்டேக் செய்ய முயற்சிகள் நடந்து வருகிறது இந்த சூழலில், வரும் காலங்களில் விமானப்படை மற்றும் ராணுவத்திலும் கூட அமெரிக்கா சீனாவை மிஞ்சலாம் என்று உலக நாடுகளுக்கு வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்தியாவிடம் தற்போது 140 போர்க் கப்பல்கள் உள்ளன. இதை 2027ம் ஆண்டுக்குள் 175 ஆக அதிகரிக்க இந்தியா திட்டமிட்டுள்ளது. இவை தவிர நீர்மூழ்கிக் கப்பல்களையும் சேர்த்தால் மொத்த கப்பல்களின் எண்ணிக்கை 350 ஆக உயரும்.உலகின் மிகவும் வலிமையான ராணுவமாக அமெரிக்கா தான் இருந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்கா தனது ராணுவத்தை வலிமைப்படுத்தப் பல லட்சம் கோடிகளை ஒதுக்கீடு செய்து வருகிறது.அதேநேரம் கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்காவைப் போலவே இந்தியாவும் கூட ராணுவத்தில் பெரியளவில் முதலீடு செய்து வருகிறது. வலிமையான ஒரு பாதுகாப்புப் படையை உருவாக்கச் இந்தியா தொடர்ந்து முதலீடு செய்து வருகிறது. இதற்கு முன்பு இல்லாத அளவுக்கு படுவேகமாக இந்தியா தனது ராணுவத்தை நவீனமயமாக்கி வருகிறது. அமெரிக்காவை விஞ்சும் அளவுக்கு இந்த நவீனமயமாக்கும் பணிகள் நடந்து வருகிறது.
சிலநாட்களுக்கு முன்னர் ஐஎன்எஸ் சூரத், ஐஎன்எஸ் நீலகிரி மற்றும் ஐஎன்எஸ் வக்ஷீர் ஆகியவை இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டது அதுமட்டுமில்லாமல் இந்திய ராணுவம் உலகின் மிக உயரமான போர்க்களமான சியாச்சின் பனிப்பாறையில் -40°C இருக்கும் வெப்பநிலையில் 5G மொபைல் டவரை நிறுவ உள்ளது. மேலும் ரபேல் போர் விமானங்களை அதிகரிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.இது ஒருபக்கம் என்றால் நம்முடன் சந்திக்கு வரும் அண்டை நாடுகளை அலற விட்டு வருகிறது இந்தியா. இந்தியாவை பகைத்து கொண்ட கனடா பிரதமர் தற்போது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்தியாவை பற்றி போலி கருத்துக்களை வெளியிட்ட அமெரிக்காவின் ஹிண்டன்பெர்க் நிறுவனம் தற்போது நிரந்தமாக மூடப்பட்டுள்ளது.பிரதமர் மோடியை விமர்சனம் செய்த மாலத்தீவு அதிபர் இந்தியவிடம் தஞ்சம் அடைந்துள்ளார். உக்ரைன் போருக்கு இந்தியாவை நடுவராக இருந்து போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என உக்ரைன் அதிபரும் ரஸ்ய அதிபரும் கேட்டு கொண்டுள்ளார்.
அதுமட்டுமில்லாமல் பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் இடையே கடும் மோதல் நடந்து வருகிறது. தாலிபான்களை வீழ்த்த பாகிஸ்தான் சதிவேலைகளில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் ஆப்கானிஸ்தான் விமானங்களை கடத்தவும், தாக்குதல் செய்யும் வகையில் முக்கிய தகவல்களை பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு பிரிவை சேர்ந்த அதிகாரி சேகரித்து உள்ளார். இதுபற்றி ஆப்கானிஸ்தானின் தாலிபான்கள் அறியாத நிலையில் இந்தியா முக்கிய எச்சரிக்கையை செய்துள்ளது. இதையெல்லாம் பார்த்து வரும் உலக வல்லரசு நாடுகள் இந்தியாவை பார்த்து பயந்து தான் உள்ளார்களாம்.