ஆபரேசன் சமுத்திர சேது- ஐஎன்எஸ் ஜலஸ்வா கப்பல் 700 இந்தியர்களுடன் மாலேயில் இருந்து தூத்துக்குடிக்கு புறப்பட்டது.

வெளிநாடுகளில் இருக்கும் இந்தியர்களை கடல் வழியாக இந்தியாவுக்குக் கொண்டு வரும் தேசிய முயற்சிக்கு இந்தியக் கடற்படை உறுதுணையாக மேற்கொண்டு வரும் ஆபரேசன் சேதுவின் மூன்றாவது பயணமாக, இந்தியக் கடற்படை கப்பல் ஐஎன்எஸ் ஜலஸ்வா,  ஜூன் 4-ஆம் தேதி மாலத்தீவுகளின் மாலேவுக்கு சென்றடைந்தது. அங்கு 700 இந்தியர்களை ஜூன் 5-ஆம் தேதி ஏற்றிக்கொண்டு மாலையில் அங்கிருந்து புறப்பட்டது. பயணிகளை ஏற்றும் போது, மாலத்தீவுகளின் கடலோரக் காவல் படையின் கமாண்டண்ட் கர்னல் முகமது சலீம் கப்பலுக்கு வருகை புரிந்தார்.

இந்திய அரசின் வந்தே பாரத் இயக்கத்தின் விரிவான குடையின் கீழ், ஜலஸ்வா கப்பல் இந்தியர்களை நாட்டுக்குக் கொண்டு வருகிறது. இந்தப் பயணத்துடன், அந்தக் கப்பல், மாலத்தீவுகள், இலங்கையிலிருந்து சுமார் 2700 இந்தியர்களை நாட்டுக்கு வெற்றிகரமாக அழைத்து வந்து சாதனை படைக்கும்.

இந்தக் கப்பலில் கொவிட்-19 விதிமுறைகள் மிகக் கடுமையாகப் பின்பற்றப்படுகிறது. இக்கப்பல் ஜூன் 7-ஆம் தேதி , தூத்துக்குடி வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தின் தூத்துக்குடியில் கப்பலில் இருந்து இறக்கப்படும் இந்தியர்கள் மாநில அரசு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவார்கள்.

Exit mobile version