சென்னை ஐபிஎல் அணி தெரிந்த அளவு “ஐ.என்.எஸ் சென்னை கப்பல்” பற்றி தமிழனுக்கு தெரியாது சோகம் !

தன் கப்பல்படையினை மிக வேகமாக வலுபடுத்தி வரும் இந்தியா நாசகாரி வகையிலான ஐ.என்.எஸ் விசாகபட்டினம் கப்பலை கடலில் இறக்கியுள்ளதுஇதன் வெள்ளோட்டமும் பயிற்சிகளும் முடிந்தபின், கப்பலின் உறுதிதன்மை உறுதிபார்க்கபட்ட பின் மேலதிக நவீன விஷயங்கள் அதில் நிறுவபடும்இந்தியாவின் மிகபெரிய பலமும் பலவீனமும் அதன் கடல்பாதை, இந்த கடல்பாதையினை குழப்பத்தான் கிழக்கு பாகிஸ்தான் என்றொரு நாட்டை உருவாக்கி இந்திய கடலில் இந்தியாவும் பாகிஸ்தானும் குடுமிபடி சண்டையிட திட்டமிட்டு செயல்படுத்தி சென்றான்.

ஆனால் இந்திராவின் மிக நல்ல திட்டங்களில் இன்றான பாகிஸ்தான் பிளப்பு வெற்றிகரமாக நடந்ததில், மானெக்சா முதலான தளபதிகளின் நுணுக்கமான திட்டத்தில் பாகிஸ்தான் பிளக்கபட்டதில் மொத்த கடல் பரப்பும் இந்தியாவுக்கே சொந்தமானதுகுஜராத் தொடங்கி வங்கம் வரை மூன்று பரந்த கடல் எல்லை இந்தியாவுக்கு உண்டு என்பதால் அதன் கடல் பாதுகாப்பு இந்தியாவுக்கு முக்கியமானது.

இதனால் கடல்பலத்தில் இந்தியா கவனமாயிருக்கும்இப்பொழுது இந்திய கடல் எல்லையான இந்துமாக்கடலில்தான் சீனாவின் பிரதான கடல்பாதை உண்டு, அதன் வழியாகத்தான் அதன் ஏற்றுமதி இறக்குமதி எல்லாம் நடக்கும்இந்த கடலுக்கான வழி மலாக்காவினை அடுத்த அந்தமான் வழியாகத்தான் வரவேண்டும் என்பதால் இந்தியாவுக்கு வாய்ப்பும் பலமும் அதிகம்இதனால்தான் சீனா பல இடங்களில் யோசிக்கின்றது, அந்தமான் பக்கம் சீனாவின் கப்பல்களை இந்தியா முடக்கி வழியினை பூட்டினால் சீனா திணறிபோகும்இது சீனாவுக்கும் தெரியும் என்பதால்தான் அது மிகபெரிய கடல்படையினை கொண்டிருக்கின்றது,.

ஆம் உலகிலே சீனாவிடம் தான் கப்பல்படை கப்பலும் வீரர்களும் அதிகம்ஆனால் அதன் தொழில்நுட்பம் மற்றும் இயங்குதிறன் அவ்வளவு சிலாகிக்க கூடியது அல்ல என்பதால் திறமை அடிப்படையில் அமெரிக்காவும் ரஷ்யாவும் ஆதிக்கம் செலுத்துகின்றன‌இந்நிலையில் சீனாவினை எதிர்கொள்ள அதிரடியாக கப்பல்களை களத்தில் புதிது புதிதாக இறக்குகின்றது இந்தியாஅவ்வகையில் ஐ.என்.எஸ் விசாகபட்டினம் இரு தினங்களுக்கு முன் இறங்கியிருகின்றது.

இது நவீன கப்பல் ஏகபட்ட பாதுகாப்பு அம்சங்கள் உண்டு, வங்க கடலில் சீனாவினை இது எளிதாக கட்டுபடுத்தும்ஸ்டெல்த் தொழில்நுட்பமும் நவீன ஏவுகனைகளை குறிதவறாது வீசும் ஆற்றலும் அப்படியே தன்னை தற்காத்து கொள்ளும் வசதியும் இந்த கப்பலில் உண்டுஇக்கப்பல் காங்கிரஸ் காலத்தில் அறிவிக்கபட்டது சந்தேகமில்லை, காங்கிரஸிடம் ஒரு நல்ல வழக்கம் உண்டு.

அதாவது இந்திய ராணுவம் ஒரு ஆலோசனையோ கோரிக்கையோ வைத்தால் “இதோ உடனே திட்டம் தயார்” என அறிவித்துவிடுவார்கள் அத்தோடு அதை மறந்துவிட்டு கருணாநிதியுடன் கூட்டணி, லாலுவுடன் லல்லலா, சரத்பவாருடன் சந்திப்பு என ஒரு மாதிரி கிளம்புவார்கள் அத்தோடு அவர்கள் அரசிலும் ஆயிரம் சிக்கல் வரும் இதனால் முக்கிய விஷயங்களை மறந்துவிட்டு அவர்கள் போக்கில் இருப்பார்கள்.இதில் இந்தியா கப்பல் கட்டினால் தங்களுக்கு ஆபத்து என அந்நிய நாடுகள் தங்கள் கைகூலிகளை ஏவிவிட்டு விஷயத்தை திருப்பிவிடும் காட்சிகளும் உண்டு.

ஆனால் மோடி அரசு அப்படியல்ல, அது ராணுவத்துக்கும் அதன் காரியங்களுக்கும் முழு சுதந்திரம் கொடுத்து களத்தில் இறக்கியிருகின்றதுஇந்த இடத்தில் திராவிட கோஷ்டிகள் ஒரு விஷயத்தை எழுப்பலாம் “அதென்ன? ஐ.என்.எஸ் விசாகபட்டினம்?, அப்படியானால் சென்னை புறக்கணிக்கபடுகின்றதா” என சீறலாம் 2018லே “ஐ.என்.எஸ் சென்னை கப்பல்” கடலில் இறக்கபட்டு வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருக்கின்றது, சென்னை ஐபிஎல் அணி தெரிந்த அளவு அக்கப்பல் பற்றி தமிழனுக்கு தெரியாது என்பதுதான் சோகம்மிக வேகமாக சீனாவினை எதிர்கொள்ள நிலம், நீர், வான்வெளி என எல்லா பக்கமும் பெரும் ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கின்றது தேசம்

Exit mobile version