IPS அதிகாரி ஆளுநராக நியமனம் திருடனுக்கு தேள் கொட்டியதுபோல் காங்கிரஸ் அலறுவது ஏன்? எச்.ராஜா கேள்வி

ஆளுநர் நியமனம் பிரிவினைவாதிகளுக்கு பீதியை தருகிறது, தேசியவாதிகளுக்கு மகிழ்ச்சியை தருகிறது! சரியான தேர்வு செய்த பிரதமர்க்கு நன்றிகள்!பிரிவினைவாதிகளுக்கு கலக்கம், தேசியவாதிகளுக்கு காங்கிரஸ் அழகிரி: “ஸ்டாலின் ஆட்சிக்கு இடையூறு ஏற்படுத்தவே ‘காவல்துறை பின்புலம்’ கொண்ட ஆர். என். ரவியை ஆளுநராக நியமித்திருக்கிறது மோதி அரசு.

கண்டனங்கபுதிய தமிழகம் டாக்டர் கிருஷ்ணசாமி: “மிகமிக முக்கியமான இத்தருணத்தில் தமிழக ஆளுநராகப் பதவியேற்கவுள்ள அவரது பணியால் தமிழ் மாநிலம் தேசிய நீரோட்டத்தில் நிலைத்து நிற்கும் என நம்புகிறேன்.”குறிப்பு: “மிசா காலத்தில் ஈவ் டீசிங்கில் பிடிபட்டு, காவல்துறை ‘கையாண்டதால் / காலாண்டதால்’ வாய் கோணியது, அதனால் தான் நேர்மையான காவல்துறையினரை கண்டால் விடியலுக்கு நடுக்கம்” என்ற வதந்தியை யாரும் நம்ப வேண்டாம்!

காவல்துறையில் மாநில அளவிலும், தேசிய புலனாய்வுத் துறையிலும் பணியாற்றி ஓய்வு பெற்றவரும், இந்திய அரசின் பாதுகாப்புத் துணை ஆலோசகராகவும், நாகலாந்து ஆளுநராகவும் பணியாற்றி, தற்போது தமிழ்நாடு ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கக்கூடிய மாண்புமிகு ஆர்.என்.இரவி அவர்களுக்கு புதிய தமிழகம் கட்சியின் சார்பாக நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மிகமிக முக்கியமான இத்தருணத்தில் தமிழக ஆளுநராகப் பதவியேற்கவுள்ள அவரது பணியால் தமிழ் மாநிலம் தேசிய நீரோட்டத்தில் நிலைத்து நிற்கும் என நம்புகிறேன் என அவர் பதிவிட்டுள்ளார்.

காரைக்குடியில் பா.ஜ.க முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா தனது இல்லத்தில் 6 அடி விநாயகர் சிலையை வைத்து வழிபாடு செய்தார். அப்போது பேசியவர், ” தமிழகத்தில் ஆண்டுதோரும் விநாயகர் சதுர்த்தி அன்று பொது இடத்தில் விநாயகர் சிலைகளை வைத்து சமூதாய ஒற்றுமைக்காக எல்லா பகுதிகளிலும் வழிபட்டு ஊர்வலம் சென்று கரைப்பது வழக்கம் தமிழ அரசு மத்திய அரசு வழிகாட்டுதலை  பின்பற்றுவதாக கூறி விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு தடை விதித்துள்ளனர்.

பக்ரித் பண்டிக்கையின் போது வீதிகளில் தொழுகைக்கு அனுமதி அளித்தனர். அது எந்த விதத்தில் நியாயம் மத்திய அரசு வழிகாட்டுதலை எல்லா மதத்திற்கும் பின்பற்றினால் அது நேர்மையான அரசு. கரூரில் ஒரு காவல் அதிகாரி விநாயகர் சிலையை உடைக்கிறார் தமிழகம் முழுவதும்  விநாயகர் சிலை செய்யும் இடங்களில்  பூட்டு போடப்பட்டுள்ளது.போலீஸ் விநாயகர்  சிலையை திருடலாமா? நாட்டுக்கு காவல் அளிக்கும் போலீஸ் விநாயகர் சிலையை திருடுவது அராஜாகத்தின் உச்சகட்டம் என்றார்.

மேலும் காவல்துறை தலைவர் அந்த காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். அவர்கள் திகவா? ,விசிகா? ,கம்யூனிஸ்டா? எந்த கட்சியை சேர்ந்தவர்கள் என்பது தெரிந்தாக வேண்டும் .நாட்டுக்கு எதிராக இவர்கள் செயல்பட மாட்டார்கள் என்று எப்படி உறுதியாக சொல்லமுடியும். பெரும்பாண்மை சமூகத்திற்கு எதிராக இந்துமத உணர்வுகளை காயப்படுத்தும் விதமாக பல காவல் அதிகாரிகள் செயல்பட்டு இருப்பது கண்டிக்கதக்கது.அவர்கள் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுக்கவில்லை என்றால்  அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி முடிவு செய்யப்படும் என்று கூறினார்.

செப்டம்பர் 17 சமூகநீதி நாள் என்பதை ஏற்றுகொள்கிறேன். நாடு சுதந்திரமடைந்து 68 வருடமாக பிற்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்காத ஐக்கிய முற்போக்கு கூட்டணி பிற்பட்ட சமுதாயத்தின் எதிரிகள். ஒ.பி.சி க்கு இடஒதுக்கீடு ஆல் இந்தியா மெடிக்கல் படிப்பில பிற்பட்டோருக்கு  27% ஒதுக்கீடு வழங்கிய  பிரதமர் மோடி பிறந்தநாள் சமூகநீதி நாள் என்று ஏற்றுக்கொள்கிறோம்.

தமிழக ஆளுநராக  பன்வாரிலால் புரோகித் சிறப்பாக செயல்பட்டார் . முன்னாள் போலீஸ் அதிகாரி 1976 ஆண்டு IPS அதிகாரி மற்றும் உளவுதுறையில் பணிபுரிந்தவர் புதிய ஆளுநரை தமிழக முதல்வர் வாழ்த்து கூறி வரவேற்றுள்ளார்.திருடனுக்கு தேள் கேட்டியது போல் ஆளுநர் மாற்றத்திற்கு  காங்கிரஸ் தலைவர் அழகிரி அலறுகிறார். ஏன் என்று  தெரியவில்லை. ஆளுநர் மாற்றம் எங்கோ நெறி கட்டுகிறது  என்று பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கூறினார்.

Exit mobile version