மீண்டும் சம்பவத்திற்கு தயாரான ஆளுநர் ? பிரதமர் மோடியுடன் ஆளுநர் ஆர்.என். ரவி சந்திப்பின் பின்னணி இதுதானாம்..

பிரதமர் நரேந்திர மோடியை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று திடீரென சந்தித்து பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தனிப்பட்ட பயணமாக டெல்லி செல்வதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் பிரதமர் மோடியை ஆளுநர் ரவி சந்தித்து பேசியுள்ளார்.தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, 4 நாட்கள் பயணமாக டில்லி சென்றுள்ளார். அவர், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட தலைவர்களை சந்திக்க நேரம் கேட்டுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் இது தனிப்பட்ட பயணம் என கவர்னர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்நிலையில், டில்லி லோக் கல்யாண் சாலையில் உள்ள பிரதமர் இல்லத்தில் மோடியை, கவர்னர் ரவி சந்தித்து பேசி உள்ளார். அப்போது, தமிழகத்தின் அரசியல் சூழல், சட்டம் ஒழுங்கு குறித்து, பிரதமர் மோடியுடன் கவர்னர் ரவி ஆலோசனை நடத்தியதாக, டில்லி வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.ஜனவரி 6ம் தேதி, கவர்னர் உரையுடன் தமிழக சட்டசபை கூடும் நிலையில், இந்த சந்திப்பு நடந்துள்ளதால் அரசியல் களத்தில் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

தமிழ்நாடு சட்டசபை கூட்டங்கள் ஒவ்வொரு ஆண்டும் தொடங்கும் போதும் ஆளுநரின் மோதல் போக்கு பகிரங்கமாக இருப்பதும் வழக்கம். ஆளுநர் தமது உரையில், சட்டம் ஒழுங்கை சிறப்பாக நிலைநாட்டுவதால், தமிழ்நாடு தொடர்ந்து அமைதிப் பூங்காவாகத் திகழ்கிறது; பன்னாட்டு முதலீடுகளை ஈர்த்து அனைத்துத் துறைகளிலும் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது என்கிற வரிகளையும் திராவிட மாடல் என்ற சொல்லையும் கவனமாக தவிர்த்திருந்தார். என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே அடுத்த ஆண்டு ஜனவரி 6-ந் தேதி தமிழ்நாடு சட்டசபை ஆளுநர் உரையுடன் கூடும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்திருந்தார். இந்த பின்னணியில் டெல்லிக்கு சென்ற ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். தமிழ்நாடு சட்டசபை கூட இருக்கும் நிலையில் பிரதமர் மோடியை ஆளுநர் ரவி சந்தித்து பேசியிருப்பதன் பின்னணி குறித்துதான் தற்போது அரசியல் வட்டாரங்கள் விவாதித்து வருகின்றன.

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. சட்டம் ஒழுங்கு குறித்து பல குற்றசாட்டுகள் அதிமாகி உள்ளது.கோவையில் மரணம் அடைந்த தொடர் குண்டு வெடிப்பு முக்கிய குற்றவாளி பாஷா உடல், ஊர்வலமாக கொண்டு செல்ல போலீசார் அனுமதி வழங்கியது, பெரும் சர்ச்சையை கிளப்பியது. நான்கு கிலோமீட்டர் துாரத்துக்கு நடந்த இந்த ஊர்வலத்தில் இரு சக்கர வாகனங்களில் சென்ற ஏராளமானோர் பங்கேற்றனர்.ஊர்வலம் செல்லும்போது, மாநகரில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. போலீசார் ஏராளமானோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்

குறிப்பாக கோவை குண்டுவெடிப்பு குற்றவாளிக்கு பாஷா மரண ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் குறித்து முழுவீடியோ பதிவும் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கும் ரா அமைப்புக்கும் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் இந்த ஊர்வலத்தை முன்னணியில் இருந்து ஊர்வலத்தை நடத்தியவர்கள் யார் யார் என்ற தகவலும் ரிப்போர்ட்டாக சென்றுள்ளதாம்…

Exit mobile version