வி.சி.க என்பது விழுப்புரம் சிதம்பரம் கட்சியா? கட்சிக்குள் புகைச்சலை ஏற்படுத்திய தொகுதி பங்கீடு?

vck

vck

பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அடுத்த வாரம் இறுதியில் பாராளுமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்நிலையில் தேர்தலுக்கு ஆயத்தமாகும் வேளைகளில் அனைத்து கட்சிகளும் மும்முரமாக செயல்பட்டு வருகிறது. முக்கியமாக கூட்டணி பேச்சுவார்த்தைகள் தொகுதி பங்கீடு என அடுத்தகட்ட நகர்வுகளை எட்டியுள்ளது. பலம் பொருந்திய மோடி தலைமையிலான பாஜக அரசுக்கு எதிராக அனைத்து எதிர்கட்சிகளும் இணைந்து இண்டி கூட்டணியை உருவாக்கினார்கள்.

அந்த இண்டி கூட்டணி அடுத்தடுத்து பல விக்கெட்டுகளை இழந்து யார் கூட்டணியில் இருக்கிறார்கள் யார் இல்லை என குழப்ப கூட்டணியாக மாறியுள்ளது. மேலும் தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகள் அனைத்தும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும் மோடி தான் பிரதமர் என தெரிவிக்கிறது. பாஜக தனது 195 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்து தேர்தல் பிரச்சாரத்தையும் தொடங்கி விட்டது. காங்கிரசும் தன பங்கிற்கு 35 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரையில் மும்முனை போட்டி உண்டாகியுள்ளது. பாஜக கூட்டணியிலிருந்து பிரிந்த அதிமுக ஒரு அணியாகவும் திமுக கூட்டணி பாஜக தலைமையிலான கூட்டணி என மும்முனை போட்டி உருவாகி உள்ளது. பாஜக இந்த தேர்தலில் இரண்டாமிடம் பிடிக்கும் அதன் வாக்கு சதவீதம் கணிசமாக உயரும் என கருத்து கணிப்புகள் தெரிவித்துள்ளது இது இரண்டு திராவிட கட்சிகளுக்கும் வயிற்றில் புளியை கரைத்துள்ளது.

இந்த நிலையில் திமுக தலைமையிலான கூட்டணியின் தொகுதி பங்கீடு கிட்டத்தட்ட இறுதியாகியுள்ளது. இதில், இந்திய யூனியன் முஸ்லிக் மற்றும் கொங்கு மக்கள் தேசிய கட்சிக்கு தலா ஒரு இடமும், இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குத் தலா இரண்டு இடங்களும் தி.மு.க சார்பில் ஒதுக்கப்பட்ட நிலையில், காங்கிரஸ், ம.தி.மு.க, வி.சி.க, மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகளுக்கு தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடர்ந்து இழுபறியாக நீடித்து வந்தது. . இந்த நிலையில், வி.சி.க-வுக் கடந்த மக்களவைத் தேர்தலைப் போலவே இந்தமுறை இரண்டு இடங்களை தி.மு.க ஒதுக்கியிருக்கிறது.

மக்கள் நீதி மையம் கமலுக்கு ராஜ்யசபா சீட் என்றும் நாடாளுமன்ற தேர்தலில் சீட் இல்லை என தெளிவாக கூறி கமலை நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இணைத்துக்கொண்டது. ராஜ்ய சபா தேர்தல் நடக்க இன்னும் ஒரு வருடம் இருக்கும் நிலையில் திமுக கொடுத்த வாக்குறுதியை நம்பி கமலும் ஏற்றுக்கொண்டுவிட்டார்.

தி.மு.க-வும், வி.சி.க-வும் கலந்து பேசியதில், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் விழுப்புரம், சிதம்பரம் ஆகிய இரண்டு தனித் தொகுதிகளில் வி.சி.க போட்டியிடுவதாகத் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. விசிக திமுக முதற்கட்ட பேச்சுவார்த்தையில் 3 தனித் தொகுதிகள், ஒரு பொதுத் தொகுதி கேட்டு கோரிக்கை வைத்தனர் ஆனால் அதனை காதில் கூட வாங்கி கொள்ளவில்லை திமுக பின்னர், 2 தனித் தொகுதிகள், ஒரு பொதுத் தொகுதி கேட்டு திமுகவிடம் வலியுறுத்தியுள்ளது விசிக அதையும் புறக்கணித்து தள்ளியது திமுக. இறுதியாக இரண்டு தனித் தொகுதிகள் தான் வி.சி.கவிற்கு என அழுத்தம் திருத்தமாக திமுக கூறியது. அதற்கு ஓகே சொல்லி கூட்டணியில் கையெழுத்து போட்டுள்ளார் திருமாவளவன்.

இதற்கு விசிக கட்சியில் பெரும் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது. 40 தொகுதிகளிலும் வேலை செய்யவேண்டும் ஆனால் நமக்கு தொகுதி 2 தானா என கொந்தளிக்க தொடங்கியுள்ளார்கள் திருச்சியில் நடந்த பொதுக்கூட்டத்தை பார்த்து கூட ஏன் நமக்கு இந்த நிலைமை என மனக்குமுறல்களை வெளிப்படுத்த தொடங்கிவிட்டர்கள். 2009ல் இரண்டு சீட்டு2014ல் இரண்டு சீட்டு2019ல் இரண்டு சீட்டு 2024லும் இரண்டு சீட்டு தான்… என விடுதலை சிறுத்தை கட்சியை விழுப்புரம் சிதம்பரம் கட்சி என மாற்றிவிட்டார்கள் திராவிட கட்சிகள் இந்த முறை திமுகவிற்கு வேலை செய்ய கூடாது என கட்சியின் நிர்வாகிகள் முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.

இது ஒருபுறம் இருக்க திமுகவிடம் ஒரு பொதுத் தொகுதியை கேட்டு பெறுவதற்காக விசிக தொண்டர்கள் தீக்குளிக்கவும் தயங்க மாட்டார்கள் என்று திமுகவுடன் தொகுதி உடன்பாடு எட்டப்படுவதற்கு முதல் நாள் வரை அக் கட்சியின் மாநில இளைஞரணி செயலாளர் சங்கத் தமிழன் ஆவேசமாக செய்தியாளர்களிடம் கொந்தளித்து இருந்தார்.

ஆனால் அவரோ இரண்டு தனித் தொகுதிகளுக்கு மேல் உங்களுக்கு எதுவும் கிடையாது என்று திமுக கூறிவிட்ட பின்பு இந்த முடிவு எங்களுக்கு மன வருத்தம் தருகிறது என மனக்குமுறலை கொட்டி தீர்த்துவிட்டார்.மேலும் அவரின் ஆதரவாளர்களை சந்தித்து நம் நம் தலைவருக்கு மட்டுமே வேலை செய்ய வேண்டும் எனவும் திமுக மற்றும் கூட்டணிக்கட்சிகளுக்கு வேலை செய்வது அவரவர் இஷ்டம் என தெரிவித்துள்ளதாக தெரிகிறது. நம் தென்மாநிலங்களில் காங்கிரஸ் கம்யூனிஸ்ட் கட்சிகளை எதிர்த்து தான் போட்டியிடுகிறோம் அதனால் தேர்தல் வேலைகள் அதிகம் உள்ளது நாம் அனைவரும் தமிழகத்தில் நம் போட்டியிடும் தொகுதிகள் மற்றும் வேறு மாநிலங்களில் போட்டியிடும் நம் கட்சி வேட்பாளர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என அறிவுத்தியுள்ளதாக விசிக வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா, கேரளா ஆகிய நான்கு தென் மாநிலங்களிலும் 20க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்து அதற்கான நடவடிக்கைகளில் விசிக தீவிரமாக இறங்கி இருப்பது இண்டி கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் எதிர்ப்பை சம்பாதித்துள்ளது விசிக என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழ்கத்தில் எப்படி இவர்கள் ஒன்றுடன் ஒன்று இணைந்து வேலை செய்வார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Exit mobile version