உலகத்தை அச்சுறுத்தி வரும் பிடியிலிருந்து தப்பிக்க இந்தியா மற்றும் உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றார்கள். இந்தியாவை பொறுத்தவரையில் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமாகி வருகிறது. இஸ்லாமிய மத பிரச்சாரம் செய்ய வந்தவர்களால் தான் இந்தியா முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகமானதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
டில்லியில் உள்ள நிஜாமுதீனில் உள்ள மசூதியில் இந்த மதம் 13 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை இஸ்லாமிய மதவழிபாடு கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த மத வழிபாட்டில் சுமார் 1500 பேர் வரை கலந்து கொண்டுள்ளார்கள். இந்த மதவழிபாடு கூட்டத்தில் வெளிநாட்டவர்களும் கலந்து கொண்டுள்ளதால். கொரோனா அச்சம் பரவியது . இதனை தொடர்ந்து இந்த மத வழிப்பாட்டில் கலந்து கொண்ட தெலுங்கானாவைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது. இதை தெலுங்கானா மாநில அரசு மார்ச் 30 அன்று உறுதிபடுத்தியுள்ளது.
இதனை தொடர்ந்து , அந்த மசூதியில் வழிபாடு நடத்தியவர்களுக்கும் மத வழிபாட்டில் பங்கு கொண்டவர்களுக்கும் கொரோன பாதிப்பு இருக்ககூடும் என்பதால் காவல்துறையினர் அந்த பகுதிக்கு சீல் வைத்துள்ளனர். அந்த மத வழிபாட்டில் கலந்து கொண்டவர்களுக்கு கொரோனா தொற்று இருக்குமா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பலரையும் மருத்துவமனையில் சோதனைக்காக அனுமதித்தனர்.
இந்த கூட்டமானது அரசு விதித்த தடை உத்தரவை மீறி கூட்டம் நடந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இதை ஏற்பாடு செய்தவர்களுக்கு டெல்லி அரசு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் இக்கூட்டத்தில் பங்கேற்று கொரோனா நோய் தொற்று உடைய நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். அந்த கூட்டம் குறித்து உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என தெலுங்கானா மாநில சுகாதாரத்துறை கூறியுள்ளது. தெலுங்கானாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 76 ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.